நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன்’என்பதற்கு சாட்சியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு தாம் தரிசனத்தில் காண்பித்த ஊழியம் இன்று அவர் காண்பித்தபடியே நடைபெற்று வருகிறது...
50,000 பேர் அமரக்கூடிய வகையில் மாபெரும் தேவனுடைய கூடாரத்தை கட்டியெழுப்ப தேவன் கட்டளையிட்டார். இதற்காக, சுமார் 8 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த தேவப் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த பொழுது, இது தேவசித்தம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்...
ஜெப நடைத் தோட்டத்தில் 70 ஜெப மையங்கள் இருக்கும். இந்தியாவின் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்கள், உலகின் 5 கண்டங்கள் என்று ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு மாநிலமாக இருக்கும்...
தேவனுடைய வீட்டிலிருந்து உலகமெங்கும் சுவிசேஷம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம். முதன் முதலாக 1984ம் ஆண்டு பஹ்ரெய்ன் தேசத்திற்கு கர்த்தர் கொண்டு சென்று பயன்படுத்தினார்...
கர்த்தருடையஅழைப்பிற்கு கீழ்ப்படிந்து கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தியவுடன் சகோதரர் செய்த முதல் ஊழியம் சிறுவர்கள் மத்தியில்தான். சிறுபிள்ளைகள் என்றால் சகோதரருக்கு கொள்ளை பிரியம். சிறுவயதிலேயே பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்ற பாரமும், தரிசனமும் சகோதரருக்கு எப்பொழுதும் உண்டு.
விளையாட்டுத் துறையில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்
நமது இயேசு விடுவிக்கிறார் ஊழியமானது, 2005ம் ஆண்டு முதல், விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தி, தன் முத்திரையை பதித்து வருகிறது. சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த தரிசனத்தின்படி, விளையாட்டு வீரர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறோம்.....
நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெப முகாம் பொங்கல் விடுமுறை அன்று 2012 ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் சுமார் 7,000 தேவ பிள்ளைகள் கூடிவந்து தேசத்திற்காக ஜெபித்தார்கள்...