விடுதலைப் பெருவிழா
இயேசு விடுவிக்கிறார் - விடுதலைப் பெருவிழா...
அன்பார்ந்த தேவ பிள்ளைகளே உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...
தரித்திரருக்கு சுவிசேஷம்
சகோதரரின் பிரசங்க ஊழியம் முதலாவது ஆரம்பிக்கப்பட்டது தெருக்களில்தான், தெருப்பிரசங்கத்தில் கர்த்தர் விசேஷித்த கிருபைகளைக் கொடுத்தார். எந்தத் தெருவிலும் எவ்வளவு ஜனங்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு ஏற்றவிதத்தில் தைரியமாய் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கர்த்தர் கிருபை பாராட்டினார். வேதாகமக் கல்லூரியில் சகோதரருக்கு ரெடிமேட் பிரசங்கியார் என்ற பெயருமுண்டு.
சிலநூறிலிருந்து
தெருக்களில் பிரசங்கித்த சகோதரரை கர்த்தர் சபைகளில் சாட்சி சொல்ல, சபை ஆராதனையில் செய்தியளிக்க பயன்படுத்தினார். பிறகு கிராமங்களில் சிறிய கூட்டங்களில் செய்தியளிக்க தேவன் கிருபை செய்தார். ஆரம்பத்தில் சில நூறுகளுக்கு பிரசங்கித்த சகோதரனை இன்று பல லட்சங்களுக்கு மத்தியில் பயன்படுத்தி வருகிறார். இது தேவ கிருபையே.
இணைந்து ஊழியம்
தனியாக ஊழியத்திற்கு சென்று கொண்டிருந்த சகோதரருக்கு உறுதுணையாக ஊழியத்தில் ஈடுபட அநேக சகோதரர்களை தேவன் கொண்டு வந்து சேர்த்தார். இப்பொழுது 50 பேர் கொண்ட குழுவாக சென்று பெரிய அளவில் கூட்டங்களை நடத்த தேவன் கிருபை பாராட்டி வருகிறார்.
சகோ. அப்பாத்துரை, சகோ. சாம் ஜெபராஜ், சகோ. ஜெயக்குமார் ஆகியோர் உடன் ஊழியர்களாக சகோதரரோடு இணைந்து ஊழியம் செய்து வருகிறார்கள். பாடகர் சகோ. ஜான் பன்னீர் செல்வம் அவர்கள் பாடலின் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவதை காண்கிறோம்.
அனுப்புகிற இடங்களுக்கு
அழைக்கிற எல்லா இடங்களுக்கும் செல்வதில்லை. ஆவியானவர் அனுப்புகிற இடங்களுக்கு மாத்திரம் செல்வதால் மாபெரும் அறுவடையை ஊழியத்தில் காண முடிகிறது. சிலுவையைக் குறித்தே பிரசங்கிக்க தேவன் தெரிந்து கொண்டபடியால் அதையே உயர்த்த இதுவரை தேவன் கிருபை பாராட்டி வருகிறார். ஆத்துமாக்களைத் தவிர வேறு எதையும் ஊழியப் பாதையில் எதிர்பாராதபடியால் போகிற எல்லா இடங்களிலும் தேவன் கெம்பீரமான அறுவடையை கொடுத்து வருகிறார்.
கண்ணீரோடு ஜெபித்து கர்த்தர் சொல்கிற வார்த்தையை மாத்திரம் பிரசங்கித்து வருகிறபடியால் கண்ணீரோடு ஜனங்கள் திரளாய் மனந்திரும்புகிறதை கண்கூடாக கண்டு வருகிறோம். அவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவரல்லாதோர். ஒவ்வொரு கூட்டங்களிலும் ஆவியானவர் பலமாய் ஊற்றப்படுகிறார். பலத்த அற்புத அடையாளங்களை தேவன் செய்து வருகிறார்.
பிறவிக் குருடர்கள் பார்வையடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், ஊமையர்கள் பேசுகிறதையும், செவிடர் கேட்கிறதையும், கட்டிகள் மறைகிறதையும், செயல்படாத உறுப்புகள் செயல்படுகிறதையும் நேரில் கண்டு தேவனை மகிமைப்படுத்தி வருகிறோம்.
இந்தியாவின் தென்கோடி முனையிலுள்ள நாலுமாவடி என்ற பெயர் அறியப்படாத கிராமத்திலிருந்து தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும், இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும், உலகின் பல தேசங்களுக்கும் சுவிசேஷம் எடுத்துச் செல்ல தேவன் கிருபை பாராட்டி வருகிறார்.
எங்கெல்லாம் நற்செய்தி கூட்டங்கள் நடத்தச் செல்கிறோமோ அங்கெல்லாம் சபைகள் வளர வேண்டும் என்ற ஒரே தரிசனத்தோடு செயல்படுவதால் கூட்டங்களில் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிற மக்கள் அப்பகுதியிலுள்ள ஸ்தல சபைகளுக்கு சென்று தேவனை ஆராதிக்க உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
இணையதளம் : www.deliverancefestival.com
சாட்சிகள் :
1. பிறந்ததிலிருந்து 29 வருடங்களாக பார்வைக் குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தேன். குருடர்கள் படிக்கிற பள்ளியில் தான் படித்தேன். 29 வருடங்களாக ஊன்று கோல் உதவியுடன் தான் வாழ்ந்து வந்தேன் (நிழியிவஷ்ஐஆவிமிஷ்உவ). மற்றவர்களின் உதவி இல்லாமல் வெளியே செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவேன். இந்நிலையில் இந்தக் வட்டத்திற்கு ஒரு சகோதரி என்னை அழைத்து வந்தார்கள். ஜெப நேரத்தில் எனக்கு கண் பார்வைக் கிடைக்கும் என்ற விசுவாசத்தோடு சகோதரர் அவர்களுடன் இணைந்து ஜெபம் செய்தேன். அந்த விநாடியே என் கண்களின் மீது ஒரு வல்லமை இறங்கியது. உடனே என் கண்கள் திறக்கப்பட்டது. 29 வருடங்களாக பார்க்க முடியாத எனக்கு இப்போது அனைத்தையும் மிகத் தெளிவாக பார்க்க முடிகிறது.
தனம் (கண்ணன்குறிச்சி)
2. நான் ஒரு சீக்கியக் குடும்பத்தைச் சார்ந்தவன், எதிர்பாராதவிதமாக இந்தப் பக்கமாக நடந்து செல்லும் பொழுது, என்ன நடக்கிறது? என்று பார்ப்பதற்காக உள்ளே கடந்து வந்தேன். நான் வந்த சமயம், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைக் குறித்து, ஐயா அவர்கள் பேசி, அற்புதங்களுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். சுமார் 18 வருடங்களாக என் இரண்டு காதுகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறனை இழந்து வந்தது. 10% மட்டுமே கேட்கும் திறன் இருந்தது. அதுவும், சீக்கிரத்தில் முழுச் செவிடாகி விடும் என்று சொல்லி, டாக்டர்கள் கைவிட்டு விட்டனர். ஜெப நேரத்தில் காதுகள் மீது என் கைகளை வைத்து, ஐயா அவர்களுடன் இணைந்து ஜெபித்துவிட்டு கைகளை எடுத்தேன். என்ன ஆச்சரியம்! என் இரண்டு காதுகளும் 100% தெளிவாகக் கேட்கும் திறனைப் பெற்று விட்டன. முதல் நாளில் சுகம் பெற்றுவிட்ட நான், இரண்டு நாட்களாகப் பரிசேõதித்துவிட்டு வந்துதான் இந்தச் சாட்சியை சொல்கிறேன். சுகம் கொடுத்த இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்.
டெபஸ்சிங் (ஹரியானா)
3. நான் டெல்லி பட்டணத்தில் கட்டடம் கட்டுகிற ஒப்பந்தக்காரராக (Cஒன்ட்ரக்டொர்) தொழில் செய்து வருகிறேன். என்னுடைய தொழிலில் திடீரென்று ஏற்பட்ட நஷ்டத்தினால் சுமார் 45 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலையில் டெல்லியில் நடைபெற்ற விடுதலைப் பெருவிழாவில் கலந்து கொண்டு கண்ணீருடன் ஜெபித்து சென்றேன். யாருமே எதிர்பாராத விதமாக அடுத்த 4வது நாளில் மிகப்பெரிய கம்பெனியில் இருந்து ரூ. 2 கோடிக்கு ஒரு Cஒன்ட்ரக்ட் எனக்கு கிடைத்தது. எல்லா கடனையும் அடைத்துவிட்டு மீண்டுமாக தொழிலை ஆரம்பித்து, ஆண்டவருடைய கிருபையினால் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
ஞானபிரகாசம் செளந்தர்ராஜன் (புது டெல்லி)
4. என் கணவருடைய முதுகுத்தண்டு எலும்பில் புற்றுநோய் உண்டாகி, டாக்டர்கள் கைவிட்ட நிலையில் படுத்த படுக்கையாகிவிட்டார். நான் கூட்டங்களில் கலந்து கொண்டு, வீட்டிலிருந்த என் கணவருக்காக பாரத்தோடு ஜெபித்தேன். அந்த நேரத்தில் ஐயா அவர்கள், இங்கு வந்திருக்கிற ஒரு சகோதரி, வியாதிப்பட்டு, வீட்டிலிருக்கிற உங்கள் கணவருக்காக ஜெபிக்கிறீர்கள். அவரை இயேசு தொடுகிறார் என்று கூறினார்கள். ஜெபம் முடிந்து வீட்டிற்குப் போய் என் கணவரைப் பார்த்தபோது, அவர் நல்ல சுகம் பெற்று, எழுந்து, நடமாடிக் கொண்டிருந்தார். சுகம் கொடுத்த இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக!
கவிதா மேஹ்ரா (ஹர்மு, ஜார்கண்ட்)
உன் ஆகாரத்தை தண்ணீரின் மேல் போடு, பலனைக் காண்பாய்.
பிரசங்கி 11:1
இன்று : 72
நேற்று : 148
இந்த மாதம் : 4779
மொத்தம் : 59210


