குடும்ப ஆசீர்வாத கூடுகை

இயேசு விடுவிக்கிறார் குடும்ப ஆசீர்வாத கூடுகை...

சந்ததியின் மேல் என் ஆவியையும்; சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசா. 44:3

குடும்பம் குட்டி மோட்சம்

குடும்பங்கள் தேவனால் ஏற்படுத்தப்பட்டவை.

குடும்பங்கள் குட்டி மோட்சமாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாகும். ஆனால் எந்த நாளும் இல்லாத அளவிற்கு இந்த நாட்களில் குடும்பங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கணவன் - மனைவி பிரிவினைகள், விவாகரத்துக்கள், மாமியார் - மருமகள் பிரச்சனைகள், பெற்றோர்பிள்ளைகள் உறவு சீர்குலைவுகள்.....என்று, பரலோகத்தைப்போல இருக்க வேண்டிய குடும்பங்கள், நரகத்தைப்போல மாறி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், பொõல்லாத சாத்தான்! அவனுடைய தந்திரங்களை அநேகர் அறியாததினால்தான், குடும்பங்களில் இத்தனை பிரச்சனைகள்!

குடும்ப சந்தோஷம் மிக முக்கியமானது. காரணம், குடும்பம் நன்றாக இருந்தால்தான், சபை நன்றாக இருக்கும்! சபை நன்றாக இருந்தால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும். எனவேதான் சமுதாயத்தைச் சீரழிக்க, சாத்தான் குடும்பத்தில் கை வைக்கிறான்.

ஆகவே, குடும்பங்களைக் குறித்து அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆவியானவர் கட்டளையிட்டார். இதன் பலனாக கடந்த 2007ம் ஆண்டிலிருந்து குடும்ப ஆசீர்வாதப் பெருவிழாக்கள் மாவட்டந்தோறும் நடத்தி, குடும்பங்கள் குட்டி மோட்சமாக மாற வழிகாட்டி வருகிறோம். குடும்பம் குட்டி மோõட்சமாக மாற ஒரே வழி வேத வசனத்தின்படி வாழ்வதுதான்! இதைச் சொல்லி, ஜெபிக்கவே இத்தகைய கூட்டங்கள்.

கணவன் - மனைவி, மாமியார் - மருமகள், பெற்றோர் - பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும்? என்று வேதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லி குடும்பங்களுக்காக ஜெபிக்கிற பொழுது, அநேக குடும்பங்களில் மகிமையான மாற்றங்களை தேவன் கட்டளையிட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருச்சி போன்ற பட்டணங்களில் குடும்ப ஆசீர்வாத பெருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு மூன்று இடங்களில் குடும்ப ஆசீர்வாதப் பெருவிழாவை நடத்தத் தேவன் கிருபை பாராட்டினார்.

சேலம்

2008 ஜூன் 15ம் தேதி சேலம் சி.எஸ்.ஐ. (C.S.I) மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடும்ப ஆசீர்வாதப் பெருவிழாவை தேவன் அபரிமிதமாக ஆசீர்வதித்துக் கொடுத்தார். மைதானம் நிரம்பி வழியும்படியாக, குடும்பம் குடும்பமாகப் தேவப் பிள்ளைகள் கூடி வந்தார்கள். ஆவியானவர் பலமாய் கிரியை செய்தார். பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டது. அநேகக் கணவன்மார்கள், மனைவிமார்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பினார்கள்.

வேதத்தில் இப்படியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதா? என்று உயரதிகாரிகள்கூட ஆச்சரியப் படக்கூடிய அளவு, தேவன் மகிமையான காரியங்களைச் செய்தார்.

சென்னை

2008 ஆகஸ்ட் 1,2,3 தேதிகளில் சென்னைஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடும்ப ஆசீர்வாதப் பெருவிழாவில் கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்தார். மூன்று நாள் கூட்டத்திற்கும் திரள் கூட்ட மக்களைக் கர்த்தர் கூட்டிச் சேர்த்தார். சென்னை கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தை தேவன் ஒரு புதிய பரிமாணத்திற்குள் கொண்டு சென்றார். கடைசி நாள் கூட்டம், ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பக் கிருபை பாராட்டினார். பல லட்சங்கள் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

வேலூர்

ஆகஸ்டு 10ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற குடும்ப ஆசீர்வாதப் பெருவிழாவிலும் தேவன் பெரிய காரியங்களைச் செய்தார்.

குடும்ப ஆசீர்வாத ஜெப பங்காளர் திட்டம்

குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்க குடும்ப ஆசீர்வாத ஜெபபங்காளர் திட்டம் ஒன்றை ஏற்படுத்த தேவன் கிருபை பாராட்டினார். இத்திட்டத்தில் இணைய ஒரே ஒரு நிபந்தனைதான், ஒவ்வொரு நாளும் காலையில் குடும்ப ஜெபம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை சுமார் 40,000 குடும்பங்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்காக இயேசு விடுவிக்கிறார் குழுவினர் தவறாமல் ஜெபித்து வருகிறார்கள். இந்த ஜெபபங்காளர் திட்டத்தில் இணைந்த பிறகு அநேக குடும்பங்களில் தேவன் மகிமையான மாற்றங்களை கட்டளையிட்டிருக்கிறார். நீங்களும் இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பார்வையாளரின் எண்ணிக்கை

  • இன்று : 72
  • நேற்று : 148
  • இந்த மாதம் : 4779
  • மொத்தம் : 59210

எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க