இணையதளம்
இயேசு விடுவிக்கிறார் இணையதளம்...
ஆழத்திலே...... உங்கள் வலைகளைப் போடுங்கள்... லூக். 5:4
ஆத்துமாக்களுக்கு வலை
கர்த்தருடைய கிருபையினால் 1998ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இணையதளம் ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. ஊழியத்தின் அனைத்து தகவல்களையும் உலகத்திற்கு பரிமாறிக் கொள்ளும் ஒப்பற்ற பெட்டகமாக திகழும் இயேசுவிடுவிக்கிறார் இணையதளம் இந்த ஊழியத்தின் புதியதோர் மைல்கல்.
தினந்தோறும் கடிதம், தொலைபேசி மற்றும் தொலைநகல் என பலவிதங்களில் தொடர்பு கொண்டு ஜெபிக்க கேட்டவர்களுக்கு மின்னஞ்சல் வழியே ஜெப விண்ணப்பங்கள் அனுப்ப எளிதான வழியாக இருந்தபடியால் அனைவரும் இதனை உபயோகிக்க ஆரம்பித்தனர். தற்சமயம் தினமும் நூற்றுக்கணக்கான ஜெப விண்ணப்பங்கள் ஜெபத்திற்காக வருகின்றது. அனைத்திற்கும் உடனுக்குடன் ஜெபித்து பதில் அனுப்பப்படுகிறது.
முதலில் சாதாரண தகவல் தெரிவிக்கும் ஊடகமாக இருந்து தற்சமயம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. நம்முடைய ஊழியத்தின் பலவிதமான பிரிவுகள் பற்றிய அத்தனை தகவல்களுடன் விடுதலையின் கீதங்கள் பாடல்கள் கேட்கவும், சகோதரர் அவர்களுடைய செய்தியினை கேட்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளை அலுவலக முகவரிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சாட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
உலகத்தின் எந்த பகுதியில் உள்ளவர்களும் எளிதாக, துரிதமாக ஊழியத்தை தங்கள் காணிக்கைகளினால் தாங்குவதற்கு ஏதுவாக சுலபமான வழிமுறைகள் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கணக்கற்ற மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் வெளியிடும் அனைத்து பத்திரிக்கைகளையும் (E-Magazine) இணையதளம் வழியாக வாசித்து பயனடைவோர் ஏராளம். சகோதரருடைய ஊழிய விபரங்கள் மற்றும் புதிய வெளியீடுகள் பற்றிய முழு தகவல்களையும் உடனுக்குடன் தெரியப்படுத்துகிறோம்.
2007ம் ஆண்டு முதல் இணையதளம் வழியே ஊழியத்திற்கென்று காணிக்கை அனுப்பிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வழியே உங்களது உதாரத்துவமான காணிக்கைகளை பாதுகாப்பாகவும் எளிதாகவும் அனுப்பிடலாம்.
மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்பவர்களுக்கு ஜெபித்து பதில் தரப்படுகிறது. இதன்வழியாக அற்புதங்கள் பெற்றுக் கொண்டோர் அநேகர். அவர்களில் ஒரு சாட்சியை வாசித்து தேவனைத் துதியுங்கள்!
சாட்சி :
என்னுடைய பித்தப்பையில் அதிகமான கற்கள் உண்டாகி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். மருத்துவர்கள் பரிசேõதித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்துவிட்டனர். அந்த சமயத்தில் E-mail மூலமாக இயேசு விடுவிக்கிறார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஜெபிக்க கேட்டுக் கொண்டேன். ஜெபித்து எனக்கு இயேசு அற்புதம் செய்வார் என பதில் அனுப்பியிருந்தீர்கள். மீண்டுமா சென்று பரிசேõதித்து பார்த்த போது பித்தப்பையில் கற்கள் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் பூரணமாக சுகமாகியிருந்தது.
- சேகர் (சென்னை)
இன்று : 73
நேற்று : 148
இந்த மாதம் : 4780
மொத்தம் : 59211


