நற்செய்தி வெளியீடுகள்
இயேசு விடுவிக்கிறார் நற்செய்தி வெளியீடுகள்...
வரையப்பட்ட வார்த்தைகள்
கர்த்தருடைய தெளிவான வழி நடத்துதல்படி 1983ம் வருடம் ஜனவரி மாதம் ஒலி நாடா ஊழியம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் சகோதரர் நற்செய்தி கூட்டங்களில் கொடுக்கும் தேவசெய்திகள் ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் சகோதரர் கொடுத்த செய்திகள் அநேகருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. பின்பு விடுதலையின் கீதங்கள் பாடல் ஒலி நாடாக்கள் வெளிவந்தது. கர்த்தர் கொடுத்த இந்த பாடல்கள் அநேகருடைய உள்ளங்களில் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது. இதுவரை 14 Volume பாடல் ஒலி நாடாக்கள் வெளிவர தேவன் கிருபை பாராட்டியுள்ளார். அநேக பாடல்களை சகோ. ஜான் பன்னீர் செல்வம் அவர்கள் பாடியிருப்பது அதன் சிறப்பம்சம்.
1986ம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதல் ஒளி நாடா ஊழியம் ஆரம்பமானது. தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் நடந்த கூட்டங்கள்தான் முதன் முதலாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இன்று ஆண்டவருடைய கிருபையினால் 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சகோதரர் வழங்கிய தேவசெய்திகள் வீடியோ சி.டிக்களில் உள்ளது.
5 பாகங்கள் விடுதலையின் கீதங்கள் பாடல் குறுந்தகடுகள் (õளீம்) தயாரிக்கப்பட்டு வெளியிட தேவன் கிருபை பாராட்டியுள்ளார்.
கிறிஸ்தவரல்லாதஜனங்கள் சுவிசேஷத்தை தெளிவாக அறிந்து கொள்ள வசதியாக திரைக்கதை வடிவில் புதிய பார்வை, அன்புள்ள அனிதா, கர்மம், பரிகாரம் போன்ற வி.சிடிக்கள் நமது ஊழியத்தின் மூலம் தாயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இதன் மூலம் ஏராளமான மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதுமாத்திரமல்ல நமது தொலைக்காட்சி ஊழியங்களுக்காக தயாரிக்கப்படும் குறு நாடாகங்கள் வி.சி.டி. வடிவில் வெளிவந்துள்ளன. எங்கள் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம், கல்லும் கரையும், ஏமாந்த குருவிக்கு மொட்டை வாலு போன்ற நிகழ்ச்சிகள் தேவ பிள்ளைகளுக்கு மிகுந்த ஆசீர்வாதத்தை கொண்டு வந்துள்ளது.
1990ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நமது ஊழியத்தின் மற்றொரு பிரிவாக இலக்கிய ஊழியம் ஆரம்பமானது.
இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று முதல் புத்தகம் திருப்பத்தூரில் சகோ. சாம் ஜெபத்துரை அவர்களால் வெளியிடப்பட்டது. கர்த்தருடைய கிருபையால் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுத தேவன் கிருபை பாராட்டியுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் புத்தகங்கள் வெளியிட தேவன் அநுக்கிரகம் செய்துள்ளார்.
மகிழ்ச்சியான குடும்பம் என்று சகோதரர் எழுதிய ஒரு புத்தகம் அநேக குடும்பங்களுக்குள் மாபெரும் அன்பு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
என் ஜெபகையேடு என்று தினந்தோறும் ஜெபிக்க மக்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜெபக் குறிப்புகளடங்கிய புத்தகம் அநேகருடைய ஜெபவாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
நமது ஊழியத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இணைவசன வேதாகமம் அநேகருடைய வேத வாசிப்பில் வேதத்தின் இரகசியங்களை ஆழமாக கற்றுக் கொள்ள உதவுகிறது.
இலக்கிய ஊழியங்கள் :
1990ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நமது ஊழியத்தின் மற்றொரு பிரிவாக இலக்கிய ஊழியம் ஆரம்பமானது. இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற முதல் புத்தகம் திருப்பத்தூரில் சகோ. சாம் ஜெபத்துரை அவர்களால் வெளியிடப்பட்டது. கர்த்தருடைய கிருபையால் இதுவரை நாற்பதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுத தேவன் கிருபை பாராட்டியுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொõழிகளில் புத்தகங்கள் வெளியிட தேவன் அநுக்கிரகம் செய்துள்ளார்.
மகிழ்ச்சியான குடும்பம் என்று சகோதரர் எழுதிய ஒரு புத்தகம் அநேக குடும்பங்களுக்குள் மாபெரும் அன்பு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
என் ஜெபகையேடு என்று தினந்தோறும் ஜெபிக்கிற மக்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜெபக் குறிப்புகளடங்கிய புத்தகம் அநேகருடைய ஜெபவாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
நமது ஊழியத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இணைவசன வேதாகமம் அநேகருடைய வேதம் வாசிப்பில் வேதத்தின் இரகசியங்களை ஆழமாக கற்றுக் கொள்ள உதவுகிறது.
சாட்சி :
நான் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். வெளிநாடு சென்றால் நல்ல வேலை கிடைக்கும் என்று ஒருவரை நம்பி ரூ. 1 இலட்சம் கொடுத்து இருந்தேன். அவரும் என்னை ஏமாற்றி பணத்தை எடுத்துக் கொண்டார். சில சமயம் செத்து விடலாம் என்று கூட நினைத்ததுண்டு. இந்நிலையில் சகோதரர் அவர்கள் வாலிபர்களுக்கென கொடுத்த ஒரு செய்தியை தற்செயலாய் கேட்க நேரிட்டது. அந்த செய்தியின் மூலம் ஆண்டவருக்கு என் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தேன். என்னை ஆசீர்வதியும் என்று அந்த செய்தியினூடாக சகோதரருடன் இணைந்து ஜெபித்தேன். நானே நினைத்திராத வகையில் கத்தார் தேசத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. என் திருமணமும் ஒழுங்காகி குடும்பமாக கத்தார் தேசத்தில் இருந்து பணி செய்கிறோம்.
ஜவஹர் (பரப்பாடி)
இன்று : 73
நேற்று : 148
இந்த மாதம் : 4780
மொத்தம் : 59211


