இலங்கை ஊழியம்
இயேசு விடுவிக்கிறார் இலங்கை ஊழியத்தைப் பற்றி...
உன் தேசம் வாழ்க்கைப்படும்... ஏசா. 62:4
சிறுமைப்பட்டவன் மேல் சிந்தை
இயற்கை எழில் சூழ்ந்த இலங்கை தேசம் நமது இந்திய முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட
தேசம்தான். அங்கு நடைபெற்று வருகிற இனப்போராட்டத்தினிமித்தம் ஏராளமான உயிர்ச்சேதங்கள், அநியாயமாய் இரத்தம் சிந்தப்படுவது அந்த தேசத்திற்கே சாபமாக மாறிவிட்டது. இத்தேசத்தின் விடுதலைக்காக பாரத்தோடு ஜெபித்த பொழுது அங்கு சென்று மூன்று நாட்கள் உபவாச ஜெபம் நடத்த தேவன் கட்டளையிட்டார்.
ஆவியானவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து 2007 ஆகஸ்டு 2,3,4 தேதிகளில் திறப்பின் வாசல் உபவாச ஜெபமுகாம் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த தேசத்திற்குள் செல்ல முடியாதபடி சத்துருவானவன் எவ்வளவோ தடைகளை கொண்டு வந்த போதிலும், சகலத்தையும் செய்ய வல்லமையுள்ள தேவன் எங்களை ஒரு குழுவாக அந்த தேசத்திற்குள் கொண்டு சென்றார். தேசத்தை போர் மேகங்கள் சூழ்ந்த நிலையிலும் முழங்கால் யுத்தம் பண்ண 50க்கும் மேற்பட்ட போதகர்களும், 1000க்கும் அதிகமான விசுவாசிகளும் உபவாசத்தோடு கூடிவந்தார்கள். யுத்தம் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற, அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த லவுனியா, மட்டகளப்பு, திரிகோணமலை போன்ற பகுதிகளிலிருந்தும் 200க்கும் அதிகமான தேவபிள்ளைகள் கடந்து வந்தார்கள். தேசத்தின் சமாதானத்திற்காக திறப்பிலே நின்று கண்ணீரோடு மன்றாடினோம். ஆவியில் நிறைந்து அந்தகார வல்லமையோடு போராடினோம். ஜெபத்தைக் கேட்கிற, தேசத்திற்காக பரிதபிக்கிற தேவன் இழந்துபோன மகிமையை இந்த தேசம் திரும்ப பெறும் என்று அற்புதமாக பதில் கொடுத்தார். ஜெபித்துக் கொண்டிருந்த அந்நாட்களிலேயே தேசத்தின் அரசியலில் நல்ல மாற்றங்களை கர்த்தர் கட்டளையிட்டார்.
தொடர்ந்து அந்த தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்று ஆவியானவர் கட்டளையிட்டபடியால், இலங்கையிலும் இயேசுவிடுவிக்கிறார் ஊழியம் ஸ்தாபிக்கப்பட தேவன் கிருபை செய்தார். அன்பு சகோதரர் பிரெய்ன் ஜான் தலைமையில் ஒரு அறக்கட்டளையாக Trust பதிவு செய்யவும், வாரந்தோறும் உபவாச ஜெபங்கள் ஏறெடுக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் நமது ஊழியத்தின் சார்பில் கடந்த பெப்ருவரி 24 முதல் மார்ச் 16 வரை 21 நாட்கள் ஒரு சமாதான ஜெபயாத்திரை நடத்த எல்லா திருச்சபை மக்களுக்குள்ளும் ஒரு ஜெப விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த மன்னார், லவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை பிரதேசங்களுக்கும் கடந்து சென்று சமாதானம் உண்டாக வேண்டுமென்று ஜெபித்து வந்தோம்.
அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை திறப்பின் வாசல் உபவாச ஜெபம் காலை 10 மணியிலிருந்து 3 மணிவரை நடத்தி வருகிறோம். நாலுமாவடியிலிருந்து ஊழியர்கள் சென்று நடத்திவருகிறார்கள்.
இலங்கை தேசத்தின் பூரண சமாதானம் வரும்வரை கர்த்தரை விடப்போவதில்லை. தொடர்ந்து அநேக ஊழியங்களை அங்கு நிறைவேற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஜெபித்துக் கொள்ளுங்கள்.
இன்று : 73
நேற்று : 148
இந்த மாதம் : 4780
மொத்தம் : 59211


