24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

ஆசீர்வாதமான தமிழ்நாடு

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010

தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன். 2.நாளா. 7:14

தேசத்தை சுதந்தரியுங்கள்

2004ம் ஆண்டு ஒரு நாள் சகோதரர் தேவ சமுகத்தில் ஜெபித்த பொழுது இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, ஆசீர்வாதத்திற்காக என் பிள்ளைகள் வடித்த கண்ணீர் என் சமுகத்தை எட்டியிருக்கிறது. நான் இந்த தேசத்தை ஆசீர்வதிக்கப்போகிறேன். இந்த ஆசீர்வாதம் முதலாவது தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பமாகும். எனவே தமிழ் நாட்டைக் குறித்து அதிக கவனம் செலுத்து என்று தேவன் திருவுளம்பற்றினார்.

தேவ கட்டைளக்கு கீழ்படிந்ததின் விளைவுதான் ஆசீர்வாதமான தமிழ் நாடு 2010 தரிசனம். இந்த தரிசனம் நிறைவேறும் பொழுது தமிழ்நாடுட்டில்

  1. ஆவிக்குரிய ரீதியில் ஆச்சரியமான மாற்றங்களை காணப்போகிறோம். எங்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பெருகியிருப்பார்கள். சபைகள் வளர்ந்து பெருகும். ஆயிரம் ஆத்துமாக்கள் உள்ள சபைதான் சிறிய சபை என்றழைக்கப்படும்.
  2. ஆளுகிறவர்கள், அதிகாரிகளின் சுபாவங்களில் வியத்தகு மாற்றங்களை காணப்போகிறோம். லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான நிர்வாகத்தை காணப்போகிறோம்.
  3. பொருளாதார நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஆசீர்வாதமான முன்னேற்றம் ஏற்படும். எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கும்.

இப்படிப்பட்ட மாற்றங்கள் வரவேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய காரியங்களையும் ஆவியானவர் கட்டைளயிட்டார்.

  1. தேசத்தை ஜெபத்தால் மூடுங்கள்
  2. தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள்
  3. தேசத்தை சுதந்தரியுங்கள்

தேவ கட்டைளையை நிறைவேற்றும்வண்ணம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 2005 பெப்ருவரி 16ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை 40 நாட்கள் ஆசீர்வாத ஜெபயாத்திரை (Blessing Prayer Journey) ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டு பேருந்துகளில் 70 ஜெபவீரர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டணங்கள், கிராமங்கள் தோறும் சென்று ஜெபித்தோம். இரவில் மாவட்டத் தலை நகரங்களில் எல்லாத் திருச்சபைகளைச் சேர்ந்த தேவப்பிள்ளைகளை கூட்டிச் சேர்த்து தமிழ்நாடு மற்றும் அந்த மாவட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக கண்ணீரோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. இதன் விளைவை உடனடியாக கண்கூடாக கண்டோம்.

அசுத்த ஆவிகளின் அரண்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டது

எத்தனையோ முறை கடல் சீற்றம் வந்தும் சுனாமி வராமல் நம் தேசம் பாதுகாக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகள் கண்டிராத அளவு தமிழ்நாடு முழுவதும் ஆசீர்வாதமான மழை பெய்தது, அணைகள் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது

ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆசீர்வாதமான திட்டங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டன.

இப்படி எத்தனையோ காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து 2006ம் ஆண்டு 31 நாட்களும் 2007ம் ஆண்டு 28 நாட்களும் ஆசீர்வாத ஜெப யாத்திரையை நிறைவேற்றினோம். இதன் விளைவாக தமிழ் நாடு, மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படகூடிய அளவில் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.

தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள் என்ற இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற இலட்சக்கணக்கான கைப்பிரதிகள் அச்சடித்து ஊழியம் செய்கிற தேவப்பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். மேலும் ஈஸ்டர் பண்டிகையை திருவசன பண்டிகையாக அனுசரித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் வசன போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான வசன டிஜிட்டல் போர்டுகள் தமிழகமெங்கும் வைக்கப்பட்டது.

தேசத்தை சுதந்தரியுங்கள் என்ற பிரதான கட்டளையை நிறைவேற்ற தமிழகமெங்கும் மாவட்டந்தோறும் இயேசுவின் சேனை உருவாக்கப்பட்டு ஜெபநடை செய்து சுவிசேஷம் அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இயேசுவின் சேனையாக பயிற்சி பெற்ற ஜெப வீரர்கள் தங்களுடைய மாவட்டங்களில் ஒவ்வொரு ஞாயிறும் கூட வர கெத்சமனே ஜெபமையம் உருவாக்கப்பட்டு ஜெபிக்கவும், ஊழியம் செய்யவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆத்துமாக்கள் திரள் திரளாக மனந்திரும்பி வரும்பொழுது, அவர்களை பராமரிக்கிற, சத்தியத்திற்குள் வழிநடத்துகிற பொறுப்பு திருச்சபையினுடையது. எனவே மாவட்டங்கள் தோறும் போதகர்களுக்கென்று சபை வளர்ச்சி போதகர்கள் கருத்தரங்கு நடத்தி அவர்களின் தரிசனத்தின் எல்லையை விரிவடையச் செய்து வருகிறோம். இவ்வூழியத்தில் மூத்த போதகர் பாஸ்டர் ரத்தினம்பால் அவர்கள் மிகவும் உறுதுணையாக உள்ளார்கள்.

Back

முக்கிய செய்திகள்

12-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 2 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு