நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
பயிற்சி முகாம்கள்
ஆயத்தமாக... ஆயத்தப்படுத்த...
நாம் மாத்திரம் தேசத்திற்காக திறப்பிலே நின்று ஜெபித்தால், சுவிசேஷத்தை அறிவித்தால் தேசம் சந்திக்கப்பட்டுவிடாது. அநேக ஜெபவீரர்களை, ஆத்தும ஆதாயகர்களை, உருவாக்க வேண்டும் என்ற பாரத்தை ஆவியானவர் கட்டைளயிட்ட பொழுது ஆத்தும ஆதாய பயிற்சி முகாம்கள், ஜெபமுகாம்கள், இயேசு ஊழிய பயிற்சி முகாம்கள் நடத்த ஆரம்பித்தோம்.
ஆத்தும ஆதாய பயிற்சி முகாம் (1988)
கிராம ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள் செய்கிற அநேக குழுக்களிடம் ஊழியத்தைக் குறித்து விசாரித்த பொழுது மக்கள் வாஞ்சையோடு கேட்கிறார்கள், கைப்பிரதிகள் வாங்குகிறார்கள் என்று பதில் சொன்னார்களே தவிர இந்த ஊழியத்தின் மூலம் இத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆண்டவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று யாராலும் பதில் சொல்ல இயலவில்லை.
அப்பொழுதுதான் ஆத்தும பாரமுள்ள தேவப்பிள்ளைகளை தெரிந்தெடுத்து ஆத்தும ஆதாயம் பண்ணும் வழி முறைகளை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்த ஆத்தும ஆதாயகர்களாக உருவாக்க வேண்டுமென்று ஆவியானவர் கட்டளையிட்டார். அதன்படி 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆத்தும ஆதாய பயிற்சி முகாம் நாலுமாவடியில் நடைபெற்றது. தனிப்பட்ட நபரை எப்படி இரட்சிப்பிற்குள் வழி நடத்துவது, ஆத்துமபாரத்தோடு ஜெபிப்பது எப்படி, ஆத்தும ஆதாயத்தில் ஆவியானவரின் வல்லைமயும், வரங்களும் எப்படி கிரியை செய்கிறது போன்ற சத்தியங்கள் தெளிவாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. முகாமில் கலந்து கொõள்கிற ஒவ்வொருவரும் ஆத்தும பாரத்தாலும், வரங்களினாலும் நிரப்பப்படுகிறார்கள். கற்றுக் கொடுப்பது மாத்திரமல்ல நடைமுறை பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. இம்முகாமில் பயிற்சி பெற்ற அநேகர் இன்று ஆண்டவருக்காக பிரகாசித்து வருகிறார்கள்.
இந்தியாவில் மாத்திரமல்ல மலேசியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களிலும் ஆத்தும ஆதாய பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அநேக சபைகள் வளர்ந்து பெருகியிருக்கிறதை கண்கூடாக கண்டு கர்த்தரை துதிக்கிறோம்.
ஜெபமுகாம் (1994)
அநேக தேவப்பிள்ளைகளுக்கு ஜெபிக்க வேண்டுமென்ற விருப்பம் அதிகமுண்டு. ஆனால் எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். ஜெபவாழ்வில் வளர முடியாமல் கலங்குகிறார்கள். எனவே இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்ததுபோல ஜெப வாஞ்சையுள்ளவர்களுக்கு ஜெபத்தைக் குறித்து கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்த ஜெபவீரர்களாக உருவாக்க வேண்டுமென்ற தரிசனத்தோடு உருவாக்கப்பட்டதுதான் ஜெபமுகாம். ஜெபத்தைக் குறித்த அடிப்படை சத்தியங்கள், தனி ஜெப நேரத்தில் வரும் தடைகளை மேற்கொõள்வது எப்படி? மன்றாடி ஜெபிப்பது, பரிசுத்த ஆவிக்குள் ஜெபிப்பது, எழுப்புதலுக்காக ஜெபிப்பது, கால்மணி நேரம், அரைமணி நேரம், ஒரு மணி நேரம் கிடைத்தால் அந்த நேரத்தை ஜெபத்தில் எப்படி பயன்படுத்துவது, ஜெபக்குழுக்களை உருவாக்குவது எப்படி? ஜெபநடை செய்வது எப்படி? போன்ற நடைமுறை சத்தியங்கள் தெளிவாக போதிக்கப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொள்கிற ஒவ்வொருவரும் கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெப ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். கர்த்தரை தரிசிக்கிறார்கள். அவர் சத்தம் கேட்டு சித்தம் செய்கிறார்கள். ஜெபிக்க முடியவில்லையே என்று கலங்கும் ஒருவர் இம்முகாமில் கலந்து கொõண்ட பிறகு ஜெபிக்காமல் இருக்க முடியவில்லை என்று சொல்லும் அளவு கர்த்தர் அவர்களை உருவாக்கி விடுகிறார். இம்முகாம்கள் மூலம் நமது தேசத்தில் பல ஆயிரம் ஜெபவீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். மலேசியா தேசத்திலும் அநேக ஜெபமுகாம்கள் நடத்தி ஜெபவீரர்களை உருவாக்க தேவன் கிருபை பாராட்டியிருக்கிறார்.
இயேசு ஊழிய பயிற்சி முகாம் (2007)
ஆசீர்வாதமான தமிழ் நாடு 2010 என்ற தரிசனத்தை தேவன் தந்தார். இத்திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் இப்பொழுது இருக்கிற சில ஆயிரம் ஊழியர்கள் மாத்திரம் போதாது. மாவட்டந்தோறும் எனக்காக வைராக்கியம் பாராட்டுகிற ஒரு சேனை எழும்ப வேண்டும் என்று கர்த்தர் பாரப்படுத்தினார். எனவே இயேசுவைப்போல வாழ வேண்டும், ஜெபிக்க வேண்டும், ஊழியம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தேவப்பிள்ளைகள் எழுப்ப வேண்டும் என்ற தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் இயேசு ஊழிய பயிற்சி முகாம். 2007ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 850 தேவபிள்ளைகள் கலந்து கொõண்டு தேவனுக்காக ஒரு சேனையாக எழும்பினார்கள். இவர்கள் மாவட்டங்கள் தோறும் குறிப்பிட்ட இடத்தில் கூடி ஒருவாரம் ஜெபம், அடுத்தவாரம் ஊழியம் என்று தவறாமல் செய்து வருகிறார்கள். இவர்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்து வருகிறார்.
திறப்பின் வாசல் ஜெப முகாம்
தேசத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், தேசத்தில் கிரியை செய்கிற அந்தகார வல்லமைகள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சகோதரர் அவர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து ஜொபம் பண்ணின போது, ஜெபிக்கிற தேவ பிள்ளைகளோடு கூட இணைந்து தேசத்தினுடைய விடுதலைக்காக ஜெபிக்கும்படி 3 நாட்கள் உபசாச ஜெபத்தை ஏற்படுத்தும்படி கர்த்தர் கட்டளையிட்டார்.
அதன்படி கடந்த 2006ம் ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் திறப்பின் வாசல் ஜெப முகாம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் முகாமில் சுமார் 800 தேவ பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
2008ம் ஆண்டு நடைபெற்ற முகாமில் சுமார் 3200 தேவ பிள்ளைகள் கலந்து கொண்டனர். தேசத்தின் ஷேமத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், இயற்கை அழிவுகளிலிருந்து தேசம் பாதுகாக்கப்படவும், தீவிரவாதிகளின் வன்முறை கலாச்சாரங்கள் அழிக்கப்படவும் விசேஷித்தப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படுகிறது.
இம்முகாமல் சகோ. மோகன் சி,லாசரஸ், சகோ. வின்சென்ட் செல்வகுமார், சகோ. சாம் ஜெபராஜ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்கின்றனர். சாதாரணமாக இம்முகாமிற்கு வருகிறவர்களும், விசேஷித்த ஜெப அபிஷேகத்துடன், தேசத்தைக் குறித்த பாரத்துடன் ஜெப வீரர்களாக கடந்து செல்கின்றனர்.
தேசத்தில் நடக்கவிருக்கிற அழிவுகள் தடுத்து நிறுத்தப்படும்படி சகோ. வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மூலமாக ஆவியானவர் காரியங்களை வெளிப்படுத்துவதும், அதற்காக ஜெபிப்பதும் இம்முகாமின் சிறப்பம்சமாகும்.
எனது பெயர் சாம் சுவாமிநாதன் நான் இந்து குடும்பத்தில் பிறந்தவன். வாலிப பருவத்தில் போதை, குடிப்பழக்கவழக்கத்துக்கு அடிமையானவன். திருமணமாகி 3 பிள்ளைகள் பிறந்ததும் போதை வஸ்துக்கு அடிமையானேன். இதை என்னால்விட முடியவில்லை. இந்நேரத்தில் எனது நுரையீரல் பகுதி கெட்டுப் போனது. வயிற்றுப் பகுதி ஒன்றுக்கும் உதவாமல் போனது. மருத்துவர்கள் இனி பிழைக்கமாட்டேன், 3 நாள் மட்டும்தான் உயிர்வாழ்வேன் என சொன்னார்கள். என் தாயாரின் ஜெபத்தினால் இயேசு சுகமாக்கினார். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்.
இயேசு விடுவிக்கிறர் ஊழியத்தின் மூலம் ஜெபமுகாம் மற்றும் ஆத்தும ஆதாய பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். ஆத்தும பாரத்தால் நிரப்பப்பட்டேன். கர்த்தரின் கிருபையால் அண்ணன் மோகன் சி.லாசரஸ் அவர்கள் ஜெபித்து தீர்க்கதரிசனமாக உங்களுக்கு கர்த்தர் ஓர் வல்லமையான ஊழியத்தைக் கொடுத்து அப்போஸ்தல அபிஷேகத்துடன் பல சபைகளை நிருவி ஊழியம் செய்ய பயன்படுத்துவார் என்ற சொன்னார்கள்.
தேவவழிநடத்துதல்படி காவேரிபாக்கம், கலவை பகுதியில் 15 கிராமங்களில் ஊழியம் செய்து 5 கிளை சபையுடன் 450 பேர்களை ஞானஸ்நானத்திற்குள் வழிநடத்தவும் 10க்கும் மேற்பட்ட தலைவர்களை உருவாக்கவும், வேலூர் மாவட்டத்தில் போதகர்கள் கருத்தரங்கு, வாலிபர்கள் கூட்டம், விதவைகள் ஆசீர்வாத ஜெபம் மற்றும் சுவிசேஷ கூட்டங்களை நடத்தவும் கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்கும் நன்றி.
சாம் (காவேரிபாக்கம்)
