24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

ஒரு கோடி ஆத்துமாக்கள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு ஒரு கோடி ஆத்துமாக்கள்

என்னைக் கேளும் ஜாதிகளை உனக்கு சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை... சொந்தமாகவும் கொடுப்பேன். சங். 2:8

தனியாத தாகம்

ஒரு கோடி ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் பண்ண வேண்டும் என்ற முனைப்போடு நமது ஊழியம் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இத்தரிசனத்தைக் குறித்து சகோ. மோகன் சி. லாசரஸ் கூறுவதை தொடர்ந்து வாசியுங்கள்.

கடந்த 2007 மே மாதத்தில், இயேசு கிறிஸ்து உலாவின தேசமாகிய இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். ஒலிவ மலையின் சரிவில் இருக்கிற கெத்சமெனே தோட்டத்தைப் பார்க்க சென்றோம். இயேசு கிறிஸ்துவின் நாட்களிலிருந்த சில ஒலிவ மரங்கள் இன்றும் இருக்கின்றன. அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதியில் நாங்கள் கூடி ஜெபிக்க ஏற்பாடுகள் செய்திருந்தோம்.

அங்கு சென்றிருந்த நாங்கள் 85 பேரும் முழங்கால்படியிட்டு, இந்தியா தேசத்திற்காகக் கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பித்தோம். எல்லோருக்குள்ளும் ஆவியானவர் மிகுந்த பாரத்தை உண்டாக்கினார். இந்திய மக்கள் இரட்சிக்கப்பட, தமிழ் நாட்டிலுள்ள 7 கோடி ஆத்துமாக்களும் இயேசு கிறிஸ்துவை ருசிக்க கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான், ஒரு அதிசயம் என் வாழ்க்கையில் நடந்தது. என் கண்ணீருக்கு நடுவில் இயேசுகிறிஸ்து வந்து என் அருகில் நிற்கிறதைக் காண முடிந்தது. அவர் என்னோடு பேசினார். உனக்குப் பத்து ஆண்டுகள் தருகிறேன். அதற்குள் நீ எனக்கு ஒரு கோடி ஆத்துமாக்களைக் கொண்டு வர வேண்டும் என்றார்.

எனக்காகத் தன்னையே பலியாகக் கொடுத்த என் இரட்சகர் வந்து நின்று எனக்கு இது வேண்டும் என்று கேட்கும்போது, நான் எப்படி மறுக்க முடியும்? என்னால் எப்படி முடியும்? உமது கிருபை வேண்டும்! என்றேன். ஆத்துமாக்களைக் கொள்ளைப் பொருளாகத் தருவேன்.

ஆத்துமாக்களைச் சந்திக்கும் திட்டங்களைத் தருவேன் என்றார்.

முழு இருதயத்தோடும் இதற்காக என்னை ஒப்புக் கொடுத்தேன். அந்த நேரமுதல், ஒரு கோடி ஆத்துமாக்கள்....! ஒரு கோடி ஆத்துமாக்கள்.....! என்று என் இருதயம் கதறிக் கொண்டிருக்கிறது. இரவும், பகலும் இதுவே என் நினைவாக இருக்கிறது.

ஜெபிக்க....ஜெபிக்க...எப்படி இந்த ஆத்துமாக்களைச் சந்திப்பது? என்று ஆவியானவர் திட்டங்களைக் கொடுத்து கொண்டேயிருக்கிறார். சிறுபிள்ளைகள், இளம் வாலிபர்கள், வாலிபர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், தருமம் எடுப்பவர்கள், ஊனமுற்றவர்கள், ஆடடோ ஓட்டுநர்கள், விதவைகள், கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்கள், வக்கீல்கள்.....என்று ஒவ்வொரு இன மக்களையும் இயேசு கிறிஸ்துவுக்காகச் சந்திக்க ஜெபத்தோடு ஆயத்தப்படுகிறோம்.

முதல் கட்டமாக, இந்த தரிசனம் நிறைவேற உங்கள் ஜெபம் எனக்கு அதிகமாகத் தேவை. தினமும் இதற்காக ஐந்து நிமிடங்கள் ஜெபித்தாலே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்து விடுவார்.

ஆண்டவரே, சகோதரர் மோகன் சி. லாசரஸூக்கு ஒரு கோடி ஆத்துமாக்களைத் தாரும்! ஆத்துமாக்களை உம்மிடத்தில் கொண்டு வர ஞானத்தையும், வழி நடத்துதலையும் தாரும்! என்று ஜெபியுங்கள்.

இப்பொழுதே திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்து விட்டோம். நீங்களும் என்னோடு சேர்ந்து செயல்பட்டால்தான் இத்திட்டத்தைச் செய்து முடிக்க முடியும்!

தேவன் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்ற பல தரப்பட்ட மக்களுக்கும் பல வழிகளில் சுவிசேஷத்தை அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

சிறுவர்கள் & வாலிபர்கள்

நமது தேசத்தின் மக்கள் தொகையில் அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 30 வயதிற்கு கீழானோர்தான். எனவே இவர்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தி தீவிரமாய் ஊழியம் செய்ய ஜெபித்து செயல்படுகிறோம். பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள், கிராமங்களில் வாழும் சிறுபிள்ளைகள், தெருவோரங்களில் குப்பை பொறுக்கும் மற்றும் தருமம் எடுக்கும் சிறுபிள்ளைகளும் ஜீவனுள்ள தேவனை அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெறும் ஆவிக்குரிய காரியங்கள் மாத்திரம் அல்ல பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் சந்தோஷத்தை கொண்டு வருகிற பிள்ளைகளாக வளர சீரீய ஆலோசனையும் வழக்கப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட வாலிபர்களையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிற வாலிபர்கள் சந்திக்கப்பட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் Youth Club உருவாக்கி சமுதாயப்பணிகளிலும் ஆவிக்குரிய பணிகளிலும் ஈடுபட வாலிபர்களை ஊக்குவித்து வருகிறோம்.

திரைப்படத் துறையினர்

மெய்யான சமாதானத்தையும், சந்தோஷத்தையும் இழந்து தவிக்கிற சினிமா உலகத்தினரை சந்திக்கவும் நமது ஊழியத்தின் மூலம் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை சிறப்பு ஆசீர்வாத ஜெப நேரம் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சின்னத்திரை மற்றும் சினிமா உலகைச் சேர்ந்த இயக்குநர்கள் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், உதவியாளர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் ஒவ்வொரு மாதமும் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆட்டோ ஒட்டுநர்கள்

சென்னையில் பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர் ஜெபகுழு இயங்கி வருகிறது. இவர்கள் எல்லாரையும் ஒன்றிணைத்து சிறப்புக் கூட்டம் ஒழுங்கு செய்து நடத்தினோம். 1500க்கும் அதிகமான ஆட்டோக்களில் குடும்பம், குடும்பமாக வந்து இறங்கி விட்டார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அநேகர் உண்மையோடு தொழில் செய்ய அர்ப்பணித்தார்கள். இன்று அவர்கள் நடுவில் பல ஜெபக் குழுக்கள் உருவாகியிருக்கிறது. அந்த ஜெபகுழுவினர் ஊழியம் செய்து வருகிறார்கள்.

காவல் துறையினர்

சில வருடங்களுக்கு முன் காவல்துறையிலுள்ளவர்களின் ஆசீர்வாதத்திற்கென்று ஒரு சிறப்பு கூட்டம் ஒழுங்கு செய்திருந்தோம். ஐம்பதுபேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் முன்னூறுக்கும் அதிகமானோர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டார்கள். உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள். லஞ்சத்திற்கு இடம் கொடுப்பது சாபத்தைக் கொண்டு வரும் என்று ஆவியானவர் பேசிய பொழுது அநேகர் கண்ணீரோடு மனந்திரும்பினார்கள். இன்று அநேக மாவட்டங்களில் காவல்துறையை சேர்ந்த தேவபிள்ளைகள் மத்தியில் பல ஜெபக்குழுக்கள் உருவாகி ஊழியங்கள் நடைபெற்று வருகிறது.

தருமம் எடுப்பவர்கள்

தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். தருமம் எடுப்பவர்களுக்குள் இருக்கும் ஆத்துமாவும் விலையேறப்பெற்றதே! எனவே மாதந்தோறும் நடைபெறும் திறப்பின் வாசல் ஜெபத்தின்போது தருமம் எடுப்பவர்களுக்கென்று தனியாக சிறப்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு ஆண்டவரின் அன்பையும், இரட்சிப்பையும் எடுத்துரைத்து வருகிறோம். அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கலந்து கொள்கிற அனைவருக்கும் உணவளிக்கிறோம். பலர் தருமம் எடுக்கும் தொழிலிலிருந்து வெளியேறி சம்பாதித்து வாழ விரும்பினார்கள். அவர்களுக்கு நமது ஊழியத்தின் சார்பில் சுயதொழில் செய்ய உதவி செய்திருக்கிறோம். தருமம் எடுப்பவர்களின் பிள்ளைகளும் அத்தொழிலில் ஈடுபட்டு விடக்கூடாதென்று அப்பிள்ளைகளின் நலவாழ்வு மற்றும் படிப்பிற்கான ஏற்பாடுகளை நமது ஊழியத்தின் மூலம் செய்து வருகிறோம்.

நாலுமாவடியில் மாத்திரமல்ல சென்னை, திருச்சி, சேலம் போன்ற பட்டணங்களில் தருமம் எடுத்து பிழைக்கிறவர்கள் நடுவில் மாதந்தோறும் ஊழியம் நிறைவேற்றப்படுகிறது. சகோ. சாமுவேல் அவர்கள் இவ்வூழியத்தை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

மேலும்...

Back

முக்கிய செய்திகள்

12-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 3 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு