24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

பட்டணங்களுக்கு சுவிசேஷம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு பட்டணங்களுக்கு சுவிசேஷம்

தேசத்தின் நீளம், அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி...
ஆதி. 13:17

தனி நபர் சுவிசேஷம்

கிராமங்களில் சென்று கைப்பிரதிகள் கொடுத்து ஊழியம் செய்ய ஏராளமான ஊழியக் குழுக்கள் எழும்பியிருக்கிறார்கள். ஆனால் படித்தவர்கள், பணக்காரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தவறான எண்ணம் அநேகரிடம் உள்ளது. எனவே படித்தவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சந்திக்கப்பட வேண்டும் என்ற பாரத்தோடு பட்டணங்களுக்கு சுவிசேஷம் என்ற தரிசனம் 1988 ஆண்டு முதல் நமது ஊழியத்தில் செயல்பட ஆரம்பித்தது.

முதல் முதலில் தேசத்தின் தலைநகர் டெல்லி பட்டணத்திற்கு 1988ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 10ம் தேதி வரை சுவிசேஷத்தை சுமந்து சென்றோம். சுமார் 3,50,000 கைப்பிரதிகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அச்சடித்து கொடுக்கப்பட்டது. பின்பு 1996ம் ஆண்டு நவம்பர் 15 முதல் 25 வரை மறுபடியும் டெல்லி பட்டணத்தில் சுமார் 8 லட்சம் கைப்பிரதிகள் கொடுத்து ஊழியம் செய்தோம். இதன் மூலம் ஏராளமான ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். தொழில் அதிபர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் (னி), மத்திய அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சுவிசேஷம் அறிவிக்க தேவன் கிருபை பாராட்டினார். இவ்வூழியத்திற்கு பிறகு நமது ஊழியத்தோடு தொடர்பு கொண்ட சுமார் 5000 பேருக்கு ஹிந்தி மாதப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு மாதந்தோறும் அனுப்பி வருகிறோம்.

2000ம் ஆண்டில் மும்பை, பெங்களூர், கல்கத்தா, ராஞ்சி, சென்னை போன்ற பட்டணங்களுக்கு சுவிசேஷத்தை சுமந்து செல்ல தேவன் கிருபை பாராட்டினார். இவ்வூழியத்தின் மூலம் சுமார் 20 லட்சம் பேர்களுக்கு இயேசு என்ற நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

 
சாட்சி

தாங்கள் கொடுத்த கைப்பிரதிகள் யாவையும் வாசித்தேன். இயேசு கிறிஸ்துவைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எனக்கு இந்தி மொழியிலும், ஆங்கில மொழியிலும் இயேசுவைப் பற்றிய புத்தகங்களை அனுப்பித் தாருங்கள். அவருடைய பிள்ளையாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

S.P. தல்வார்

Back

முக்கிய செய்திகள்

11-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 7 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு