24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

ஊழியக் குடும்பம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு ஊழியக் குடும்பம்

என்னைக் கேளும் ஜாதிகளை உனக்கு சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை... சொந்தமாகவும் கொடுப்பேன். சங். 2:8

எங்கள் குடும்பம்

கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிற தாயாருக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். நாங்கள் இந்துவாக இருந்த நாட்களில் அவர்கள் விசுவாசம்தான் எனக்கு அற்புதத்தை கொண்டு வந்தது. நான் வியாதிப்படுக்கையில் சாகக்கிடந்தபோது என் தாயார்தான் ஒரு கிறிஸ்தவ சகோதரனை ஜெபிக்கும்படியாக வேண்டினார்கள். என் தாயாருடைய கண்ணீரையும் விசுவாசத்தையும் கண்டு கர்த்தர் கிருபையாக இரங்கி எனக்கு அற்புத சுகத்தை கட்டளையிட்டார். என் ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் எனக்க பாடுகளும் உபத்திரவங்களும் வந்தபோது,

ஆண்டவரை நெருங்கும்போது பாடுகள் வரும், அதில் சேõர்ந்துவிடக்கூடாது என்று என்னை தைரியப்படுத்தியவர்களும் என் தாயாரே.

மேலும் ஊழியத்திற்காக பத்துபேர், பன்னிரெண்டு பேர் எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோதும் முறுமுறுக்காமல், என்னைப்போல் எல்லோரையும் நேசித்து அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள் (இந்துவாக இருக்கும்போதே) இன்று இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளையாயிருக்கிறார்கள்.

கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கும் என் பெற்றோர்.

நான் ஊழியம் செய்ய ஆரம்பித்த நாட்களில் எங்கள் உறவினர்களால், ஊராரால் எனக்கு வந்த நிந்தைகளையும், பரியாசங்களையும் என்னோடு சேர்ந்து என் குடும்பத்தார் சகித்தார்கள். இன்று என் இரண்டு தம்பிமார்களைத்தவிர எங்கள் குடும்பம் முழுவதும் கிறிஸ்தவர்களாய் மாறியிருக்கிறார்கள். அவர்களையும் கர்த்தர் ஏற்ற வேளையில் சந்தித்து சாட்சிகளாக நிறுத்துவார்.

1979ம் ஆண்டு கர்த்தருடைய கிருகையினால் எனக்கு திருமணம் முடிந்தது. ஊழியத்தில் மிகவும் உறுதுணையாக இருக்க கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிற என் மனைவிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். என்னோடுகூட இரவும் பகலும் கர்த்தருடைய ஊழியத்தில் பாடுபட்டு வருகிறாள். வசதியான குடும்பத்தில் பிறந்த போதும் என்னோடு கூட ஊழியப்பாதையில் அதிக கஷ்டங்களையும் பாடுகளையும் சகித்தாள். இந்நாட்களில் பெண்கள் கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கர்த்தருடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்க கர்த்தர் பயன்படுத்தி வருகிறார். எங்களுக்காக அனுதினமும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

1978ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ஜெபக்குழுவாக ஆரம்பிக்கப்பட்ட இயேசு விடுவிக்கிறார் ஊழியம் 1983ம் ஆண்டு அரசாங்கத்தில் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. அந்நாட்கள் முதல் ஒவ்வொரு வருடமும் நம் ஊழியத்தின் வரவு செலவு காரியங்கள் முறையாக தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. நம் அன்பு சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள் ஊழியத்தின் இயக்குநராகவும், அவர்களோடு இணைந்து ஊழியத்தின் காரியங்களை நிர்வகிக்க ஜெபிக்கிற, ஊழியபாரமுள்ள 11 தேவபிள்ளைகள் அறங்காவலர்களாக (Trustees) செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து ஊழியத்திற்கு தேவையான முக்கியமான காரியங்களை சகோதரரின் தலைமையில் 3 மாதத்திற்கு ஒரு முறை கலந்து ஆலோசித்து செயல்படுகின்றனர்.

சகோதரருக்கு கர்த்தர் கொடுக்கிற தரிசனங்களை சுலபமாக நிறைவேற்ற ஊழியமானது, பல்வேறு துறைகளாக பிரிக்கப்பட்டு 15 பேர்கள் தலைவர்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளனர். தலைவர்கள், டிரஸ்டிகள் (Trustees) தாவீதின் பராக்கிரமசாலிகள்போல் ஊழியத்தின் காரியங்களை கவனித்துக் கொள்ள, சகோதரர் அவர்கள் அதிகமாகவே தேவ சமூகத்தில் காத்திருந்து ஊழியங்களுக்காக ஜெபித்து ஆயத்தமாக அதிக ஏதுவாய் இருக்கிறது.

கர்த்தருடைய கிருபையினால் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் 10 பேர் சுமார் 25 ஆண்டுகளாக ஊழியங்களை நிறைவேற்றி வருகின்றனர். நாங்கள் ஒரு குடும்பம் என்ற உணர்வுடன் ஊழியங்களை நிறைவேற்றுகிறோம். சகோதரரை குடும்பத்தின் தலைவராக, ஆவிக்குரிய தகப்பனாக அனைவரும் பார்க்கிறபடியால், பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் சுலபமாக மேற்கொள்ள முடிகிறது. சுமார் 40 பேர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக ஊழியத்தில் தேவ பணியை நிறைவேற்றி வருகின்றனர். இப்பொழுது சுமார் 175 பேர் முழுநேரமாக இயேசு விடுவிக்கிறார் குடும்பத்தில் இணைந்து முழுமூச்சுடன் தேவ இராஜ்யத்தை கட்டி வருகிறோம். வருடம் முழுவதும் ஊழியம் செய்கிற ஊழியர்களை உற்சாகப்படுத்த, ஊழியர்கள் குடும்ப கூடுகை ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சுற்றுலா தலத்தில் கூடி ஊழியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷப்பட்டு களிகூறவும், மீண்டும் புதிய அர்ப்பணிப்புடன் ஊழியத்திற்கென தங்களை புதுப்பித்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Back

முக்கிய செய்திகள்

11-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 7 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு