24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

சிறுவர் ஊழியம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு சிறுவர் ஊழியம்

சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் - இயேசு கிறிஸ்து.
மத். 19:14

இளந்தளிருக்கு இயேசு!

கர்த்தருடைய அழைப்பிற்கு கீழ்ப்படிந்து கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தியவுடன் சகோதரர் செய்த முதல் ஊழியம் சிறுவர்கள் மத்தியில்தான். சிறுபிள்ளைகள் என்றால் சகோதரருக்கு கொள்ளை பிரியம். சிறுவயதிலேயே பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்ற பாரமும், தரிசனமும் சகோதரருக்கு எப்பொழுதும் உண்டு.

சிறுவர் எழுப்புதல் முகாம் :

இப்படிப்பட்ட தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் இயேசு விடுவிக்கிறார் சிறுவர் ஊழியம். 1979ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் சிறுவர் எழுப்புதல் முகாம் நடத்தப்பட்டது. அதில் சுமார் 300 சிறுபிள்ளைகள் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு 30வது சிறுவர் விழாவை கொண்டாடுகிறோம். தற்பொழுது சுமார் 5000 சிறுவர், சிறுமியர் கலந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிற சிறுவர் முகாமில் தேவன் பெரிய காரியங்கைளச் செய்து வருகிறார். அதிகாலையிலிருந்தே பிள்ளைகள் கூட்டங் கூட்டமாக ஆனந்தத்தோடு வந்திறங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். அத்தனை பேருக்கும் பேட்ஜ்கள் வழங்கப்பட்டு வகுப்பு வாரியாக அமர வைக்கப்படுகிறார்கள். காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகும் சிறுவர் விழா இனிய பாடல்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது. பிள்ளைகளுக்கேற்ற குறுநாடகம், கதைகக்ஷேýõடு இரட்சிப்பின் செய்தி வழங்கப்படுகிறது. வயதிற்கேற்றபடி 150 சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மத்தியானத்தில் பிள்ளைகள் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற வழிநடத்தப்படுகிறார்கள்.

இரட்சிப்பின் அனுபவம் :

ஏராளமான சிறு பிள்ளைகள் கண்ணீரோடு மனந்திரும்புகிறதையும், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிறதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறதையும் கண்கூடாக காண்கிறோம். முகாமின் முடிவில் பிள்ளைகள் கண்ணீரோடு சொல்கிற சாட்சிகள் கேட்கிற அனைவர் உள்ளத்தையும் அசைக்கக்கூடியதாயிருக்கிறது. கடந்த முகாம்களில் கலந்து கொண்ட பிள்ளைகளில் அநேகர் கர்த்தருக்காக பிரகாசித்து வருகிறார்கள்.

பிள்ளைகளுக்காக சிறப்பு வேதாகம தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி அவர்கள் வேதவசன அறிவில் வளர உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

இளம் வாலிபர் முகாம் :

சிறுபிள்ளைகள் மற்றும் இளம் வாலிபர்களை சந்திப்பதில் அதிக கவனம் செலுத்த கர்த்தர் கட்டளையிட்டபடியால் மாவட்டங்கள் தோறும் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் வாலிபர்களுக்கான முகாம்கள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. பள்ளிகளில் சிறுவர்களுக்காக சிறப்புக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு பிள்ளைகள் தூய்மையான வாழ்க்கை வாழ வழிநடத்தப்படுகிறார்கள்.

நாலூமாவடியில் இளம் வாலிபர்களுக்காக ஆண்கள், பெண்கள் முகாம்கள் தனித்தனியே நடத்தப்படுகிறது.

சிறுவர் ஊழியம் செய்வதில் வாஞ்சை உள்ளவர்களுக்காக சிறப்பு பயிற்சி முகாம்கள் ஒழுங்கு செய்யப்பட்டு சிறந்த ஊழியர்களாய் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

சிறுவர் ஜெபமலர் :

சிறு பிள்ளைகள் ஜெபவாழ்க்கையில் வளர, தேசத்தைக் குறித்த பாரமுள்ளவர்களாக விளங்க சிறுவர் ஜெபமலர் மாதப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு பிள்ளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தேர்வு எழுதுவோருக்கு ஜெபம் :

தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு ஜெபக்கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களின் வெற்றிக்கான ஆலோசனையும், சிறப்பு ஜெபங்களும் ஏறெடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான பிள்ளைகள் ஆண்டவரின் அன்பையும் வல்லமையையும் அனுபவித்து வருகிறார்கள்.

இன்றைய சிறுவர்கள் நாளைய பாரதத்தின் வலிமையான தூண்கள்! எனவே பரிசுத்தமான சிறந்ததொரு சமுதாயம் அமைய சிறுவர் ஊழியத்தை இன்னும் தீவிரமாக செய்ய திட்டங்கள் தீட்டி வருகிறோம். சகோ. தேவதாஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

Jolly Time இணையதளம் : www.jollytime.in

 
சாட்சிகள்: :

1. கர்த்தரை அறியாத குடும்பத்தில் பிறந்த நான் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தேன். இயேசுவே ஆண்டவர் என்பதை அறியவும், நிம்மதி இல்லாமல் இருந்த எனக்கு சமாதானம், சந்தோஷம், நிம்மதியை கர்த்தர் எனக்கு கொடுத்தார். கர்த்தருக்கு நன்றி. நீண்ட நாட்களாய் அபிஷேகத்திற்காக ஜெபித்தேன். ஆனாலும் கிடைக்காத நிலையில் சிறுவர் முகாமில் கலந்து கொண்டு ஜெபித்த போது, மெல்லிய காற்றைப் போல் ஆவியானவர் என்மேல் இறங்கினார். கர்த்தர் என்னை அபிஷேகித்ததை நான் உணர்ந்தேன்.

கார்த்திகா (சாத்தான் குளம்)

2. பள்ளிக்கூட நண்பர்களினால் நான் பழகிய சில பாவ பழக்கத்திலிருந்து விடுதலை பெற ஜெபித்தேன். முதல் நாள் சந்தியாவில் மீட்பை பெற்றுக் கொண்டேன். இரண்டாம் நாள், அவர் கரம் என்னை அரவணைத்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு தன்னுடைய வல்லமையால் அளவில்லாமல் நிரப்பியதை உணர்ந்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். தற்போது ஜெயம் பெற்றவனாக வாழ்கிறேன்.

கிப்டன் ஜாண் (உடன்குடி)

3. பரிசுத்த வாழ்க்கைக்காக ஜெபித்தேன். கர்த்தர் என்னோடு பேச வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தின்படி கர்த்தர் என்னோடு பேசி என்னை மீட்டு என்னை அபிஷேகத்தினால் நிரப்பினார். இது ஒரு மருரூப அனுபவம் தான்.

திவ்யா (மதுரை)

4. இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் நடத்தப்படுகிற சிறுவர் விழாவில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்வேன். இயேசப்பாவை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முகாமிலும் ஜெபிப்பது உண்டு. கடந்த வருடம் நடைபெற்ற சிறுவர் முகாமில் கலந்து கொண்டு ஜெபம் செய்தபொழுது, கர்த்தர் சிறுபிள்ளையான எனக்கு தரிசனமாகி அபிஷேகித்தார். அவரை பார்க்கும்படிக்கு உதவி செய்தார். அந்த மகிமையை என்னால் விவரிக்கவே முடியாது. எனக்கு தரிசனமான நாளிலிருந்து என்னுடன் படிக்கும் மாணவிகளுக்கெல்லாம் இயேசப்பாவை பற்றி அறிவித்து வருகிறேன்.

செர்ரி சாண்ட்ரா (நாகர்கோவில்)

5. நான் கடந்த ஆண்டு (2007) பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு ஜெபித்தேன். கடிதம் மூலமும் எனக்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தேன். நானும் ஜெபத்துடன் மிகுந்த கவனமாக படித்தேன். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு நான் நினைத்ததற்கும் மேலாக மெட்ரிக் தேர்வில் 1100 மார்க்கிற்கு 1057 மதிப்பெண்கள் எடுத்து சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் முதல் மாணவியாக வர கிருபை செய்தார்.

இன்ஃபன்ட் பிரபா (பனங்குடி)

...இயேசு சகல கிராமங்களையும் சுற்றி நடந்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரசங்கித்து... மத். 9:35

Back

முக்கிய செய்திகள்

11-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 7 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு