நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
கடித ஊழியம்
ஆற்றவும்... தேற்றவும்...
ஆண்டவர் கொடுத்த தரிசனத்தின்படி திறப்பிலே நின்று ஜனங்களுக்காக ஜெபிக்கிற ஒரு ஊழிய பிரிவுதான் கடித ஊழியம்.
துன்பத்திலும், துயரத்திலும், பிரச்சனைகளிலும், பாடுகளிலும், கவலையிலும், கண்ணீரிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற மக்கள் தங்களுடைய விண்ணப்பங்களை எழுதி ஜெபிக்க கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 கடிதங்கள் எமது அலுவலகத்திற்கு வருகிறது. கடிங்கள் எழுதுகிற மக்களுக்காக அந்த கடிதங்கள் வந்தவுடன் தேவப்பிள்ளைகள் கூடி கருத்தாய் பிரார்தனைகள் ஏறெடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வருகிற ஒவ்வொரு கடிதங்களுக்கும் ஆண்டவருடைய ஒத்தாசையோடும் தேவ ஆலோசனையோடும் உடனுக்குடன் பதில்களை அனுப்பி வருகிறோம்.
பிரத்தியேகமாக ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நடக்கிற திறப்பின் வாசல் ஜெபத்திற்கு சுமார் 15,000 கடிதங்கள் வருகிறது. திறப்பிலே நின்று ஜெபித்து கர்த்தர் தருகிற வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு மாதமும் சமார் 30,000த்திலிருந்து 35,000 கடிதங்கள் ஜெபத்திற்காக வருகிறது. சுமார் 18 பேர் முழு நேர ஊழிய பணியிலும், 3பேர் தன்னார்வ பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாங்கள் ஜெபித்து அனுப்பி வருகிற கடிதங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சமாதானம் பெற்றவர்கள், விடுதலை அடைந்தவர்கள் அநேகம், அநேகம். அவர்கள் எழுதுகிற சாட்சி கடிதங்களை வாசித்து கர்த்தரை மகிமைப்படுத்தி வருகிறோம்!
கர்த்தருக்கு கனம் மகிமை உரித்தாகட்டும்!
எனது மகள் தெய்வ நாயகி மார்பில் கேன்சர் கட்டி இருப்பதாகவும், முற்றிலும் அந்த கட்டி கரைந்து போகும் படியாகவும், நமது பரம வைத்தியர் இயேசப்பாவை நோக்கி ஜெபிக்கும்படியும் தபால் எழுதினேன். எனது தபால் கண்டு ஜெபித்து பதில் தபாலும் அனுப்பினீர்கள். தங்களின் ஜெபத்தைக் கேட்ட அற்புதத்தின் தேவன் இயேசு பூரண சுகம் கிடைக்கம்படி செய்தார்.
கர்த்தர் செய்த இந்த பெரிதான கிருபைக்காக அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! ஜெபித்த உங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன்!
தேவ பிச்சை (வீரப்பன் சத்திரம், ஈரோடு)
நான் 4 மாத கர்ப்பினியாக இருக்கும்போது எனக்கு மிகவும் வயிற்று வலியாக இருந்தது. ஆஸ்பத்திரியில் பார்த்தபோது வயித்துல கட்டி இருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் 4 ஆஸ்பத்திரிகளில் போய் டாக்டரை பார்த்தோம். 4 பேருமே ஒரே பதில்தான் சொன்னார்கள். எங்களால ஒன்றும் செய்ய முடியாது. மருந்து மாத்திரை தரவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப வருத்தத்தோடே வீட்டிற்கு வந்தோம்.
வீட்டிற்கு வந்த பிறகு சகோதரர் அவர்களுக்கு லெட்டர் போட்டோம். நானும் வீட்டிலிருந்து ஜெபம் பண்ணிட்டு விசுவாசத்தில் உறுதியாக இருந்தேன். கர்த்தர் எனக்கு அற்புதம் செய்வார் என்று காத்திருந்தேன். சகோதரர் ஜெபித்து எனக்கு மறுமாதம் பதில் அனுப்பியிருந்தார்கள். கர்த்தர் அற்புதத்தை காணப்பண்ணுவார் என்று வாக்குத்தத்தத்தோடே எழுதியிருந்தாங்க. அதன்பின்னர் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கட்டி இருந்த அடையாளமே இல்லை என்று டாக்டர்களே ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு கர்த்தர் பெரிய அற்புதம் செய்தார். அற்புதம் செய்த கர்த்தருக்கு நன்றி!
பிரேமா (சுற்றூர்கோணம், அருமனை)
நான் ஒன்றரை வருடமாக மூல வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எத்தனையோ மருத்துவரிடம் பரிசோதனை பண்ணியும் என்னுடைய வியாதி நீங்கவில்லை. இந்த வேதனையின் மத்தியில், என்னால் B.Ed- ல் மாதிரி தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் கடிதம் எழுதி எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஜெபித்து பதில் கடிதம் எழுதியிருந்தார்கள். முடிவில் ஆச்சரியப்படும் விதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற கர்த்தர் கிருபை செய்தார்.
வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்ற வாக்குக் கொடுத்த தேவன் வியாதியில் இருந்து பூரண சுகத்தையும், படிப்பில் ஜெயத்தையும் கட்டளையிட்டு இரட்டிப்பான நன்மையை கொடுத்தார். அற்புதத்தை செய்த தேவனுக்கு நன்றி!
J. ராஜம், (நரிமேடு, மதுரை)
எனது மருமகள் கருவுற்றிருந்தபோது திடீரென மிகவும் சுகவீனப்பட்டு பலவீனமடைந்தாள் 1.1.2006ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டுபோனோம். அங்கு பரிசேõதனை செய்த பொழுது எலிக்காய்ச்சல், டைபாய்டு, அம்மைநோய் வந்திருக்கின்றது என்று கூறிவிட்டார்கள். மருத்துவர்கள் கருவை அழித்துவிடவேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கடிதம் எழுதி ஜெபிக்க கேட்டுக் கொண்டோம். ஒவ்வொரு மாதமும் திறப்பின் வாசல் ஜெபம் வரும் பொழுதும் ஜெபவிண்ணப்பம் எழுதிப்போட்டு ஜெபித்தோம். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு என் மருமகளுக்கு 25.08.2006 அன்று எந்த குறைவுமில்லாமல் அழகான ஆண் குழந்தையை தந்தார். மருத்துவ உலகம் கைவிட்டபோதிலும் மருத்துவர்கள் ஆச்சரியப்படதக்கதாக கர்த்தர் அற்புதம் செய்தார். அவருக்கே கோடி கோடி நன்றி.
லலிதாபாய் (கோடியா விளை, மார்த்தாண்டம்)
விடுதலை
கொலைக் குற்றத்தினால் சிறைச்சாலை சென்றவர் இன்று இயேசுவை அறிவிக்கும் ஊழியம் செய்து வருகிறார்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் திரு. டேவிட்ராஜ். பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டுநராகவும், தனக்கு நல்ல வாழ்க்கை தந்த இயேசுவுக்காக பகுதி நேர ஊழியராகவும் இரட்டை குதிரையில் வாழ்க்கை சவாரி செய்கிறார்.
எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிறந்த வளர்ந்தது எல்லாம் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில்தான். சின்ன வயசுல அப்பா குடிச்சுட்டு வந்து தினமும் அம்மாவை அடிப்பார். அப்பா சம்பாதிக்கிறது அவரு குடிக்கிறதுக்கு சரியா போனதால ஏழ்மையில் ரொம்ப கஷ்டப்பட்டோம். அதனால சின்ன வயசுலே படிக்க வேண்டிய நான் 50 காசுக்கு கொல்லப்பட்டறையில் இரும்பு அடிக்கிற வேலை செஞ்சேன்.
நாட்கள் நகர்ந்து செல்ல வாலிபம் எனக்குள் எட்டிப் பார்த்தபோது எனக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை வந்துச்சு. அதனால சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபட்டேன். காலப்போக்கில் ஆட்டோ ஓட்ட பழகி ஆட்டோவில் சாராயம் கடத்தினேன். பிறகு வேனில் கடத்தினேன். கடைசியில் லாரியில் கடத்தினேன். கல்யாணம் ஆனா மாறிடுவான்னு எனக்கு கல்யாணம் பண்ணிவச்சாங்க. அதுவும் பிரயோஜனம் இல்லை. என் பொண்டாட்டி எங்க அம்மா இவங்களுக்கு என்னால எப்போதும் கண்ணீர்தான். வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் ஒரே அடிதடி, சண்டைதான் இதனால குடும்பத்தோடே நிம்மதியே என்னால கெட்டுப்போச்சி. என்ன வெளியே எல்லாரும் பொறுக்கி, ரௌடின்னுதான் சொல்வாங்க. இந்த உருப்படாத சகவாசத்தால சம்பந்தமில்லாத ஒரு கொலை கேஸில் சிக்கினேன். என்னை போலீஸ் தேடினதால் பம்மாய்க்கு ஓடி தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். மறுபடியும் மூன்று வருஷம் கழிச்சு அம்மாவ பார்க்க சென்னை வந்தப்ப போலீஸ் என்ன புடிச்சிருச்சு.
அதுவரைக்கும் இருந்த கொஞ்ச நிம்மதியும் பறிபோயிடுச்சு. என்னை வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. என் குடும்பமே அநாதையாக தெருவிலே நின்றது. ஓய்வெடுக்க வேண்டிய வயசுல இருந்த என் அம்மா தெருவுல வடை போட்டு வித்து என் பொண்டாட்டி, பிள்ளைகளை காப்பாத்துனாங்க. நான் ஜெயிலிலிருந்து லெட்டர் போடுவேன். என்ன யாரும் பார்க்க வரல. இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலே எங்க அம்மா வீட்டுல இருக்கற சாமானெல்லாம் வித்து, வக்கீல் வச்சு என்ன ஜாமீன் எடுக்க எவ்வளவோ முயச்சி பண்ணினாங்க. எனக்கு ஜாமீன் கிடைக்கல. தினமும் ஜெயிலிலே என் குடும்பத்த நினைச்சு அழுவேன்.
அப்போதான் ஜெயிலிலே ஊழியம் செய்கிற ஒரு ஊழியர் இயேசு விடுவிக்கிறார் என்ற பத்திரிகையை வாசிக்க கொடுத்தார். கஷ்டமான அந்த நேரத்துல அந்த பத்திகைய படிச்சபோது மனதுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்துச்சு.
எங்களுக்கு லெட்டர் போட்டா ஜெபம் பண்ணுவோம்னு அதிலே எழுதி இருந்துச்சு. அதனால என் கஷ்டத்த ஒரு லெட்டர்ல எழுதி வேலூர் ஜெயிலிலிருந்து இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கு அனுப்பினேன். சில நாட்களிலேயே எனக்கு பதில் வந்தது. அதிலே சில வாசகங்களுக்கு பிறகு தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெருவான் என்று எழுதியிருந்தது. அதை படித்தவுடன் நான் செய்த பாவம் என்னை மிகவும் வாதித்தது. அடுத்த நாள் முதல் மூன்று நாட்கள் சாப்பிடாமல் உபவாசத்தோடு அந்த ஆண்டவருடைய பாதத்திலே வேலூர் ஜெயிலில் ஜெபம் பண்ணினேன். என் பாவத்தை மன்னிக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் கதறி அழுதேன். எனக்குள் இருந்த குற்ற உணர்வு மாறியது. இயேசுவின் பிள்ளையாக மாறின சந்தோஷம் எனக்குள் வந்தது. மறுபடியும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திலிருந்து இன்னொரு லெட்டர் வந்தது. அதிலே நீங்கள் சீக்கிரம் விடுதலையாவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கு மிகுந்த ஆச்சரியம். 11 மாசமாக ஜெயிலைவிட்டு வெளிவர எவ்வளவோ முயற்சி எடுத்தும் ஜாமீன் கிடைக்காம இருந்துச்சு. ஆயுள் தண்டனை கிடைக்கும்னு எதிர்பார்த்து இருந்தேன். ஆனா நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியத்திலிருந்து லெட்டர் வந்த அடுத்த நாளே அற்புதமாக எனக்கு ஜாமீன் கிடைத்து வெளியிலே வந்தேன். சில மாதங்களில் கோர்ட் என்னை தண்டனையிலிருந்து முழுவதும் விடுதலை செய்தது. இது எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்துக்கே ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. எங்க அம்மா அதுவரைக்கு இயேசுவை நம்பாதவங்களாக இருந்தாங்க. இந்த அற்புதத்துக்கு பிறகு எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்து இயேசுவின் பிள்ளையாக மாறிட்டாங்க. இப்போ நான் என் குடும்பமும் ரொம்ப சந்தோஷமாயிருக்கோம்.
அது மட்டுமில்லாம ஆட்டோ ஓட்டுற நேரம் போக மீதி நேரத்துல. வெளி உலகத்தில் தெரிந்து கொள்ளாத இயேசுவை வேலூர் சிறையில் தெரிந்து கொண்ட அனுபவ சாட்சி என்று அநேக இடத்தில் இயேசுவை அறிவித்து ஊழியம் செய்கிறேன். இயேசு எனக்கு செய்த இந்த அற்புதம் இயேசுவிடுவிக்கிறார் பத்திரிக்கையின் மூலமாகவும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவும் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன், தேவனை துதிக்கிறேன்....
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருக்கு கோடம்பாக்கம் சவாரி வரவே நம்மிடம் விடை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார் டேவிட்ராஜ்.
