நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
மிஷனெரி ஊழியம்
யாரை நான் அனுப்புவேன்
இந்தியர்கள் இரட்சிக்கப்பட ஜெபித்தால் மட்டும் போதாது, சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். அதற்காக மிஷனெரிகள் அனுப்பப்பட வேண்டுமென்று ஆவியானவர் பலமாக ஏவினதினிமித்தம் தோன்றியதுதான் இயேசு விடுவிக்கிறார் மிஷனெரி ஊழியம்.
1987ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திறப்பின்வாசல் ஜெபத்தில், முதல் மிஷனெரியாக நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவை சார்ந்த மிஷனெரி பிரதிஷ்டை செய்யப்பட்டார். இன்று கர்த்தருடைய கிருபையால் 23 ஸ்தாபனங்களைச் சேர்ந்த 118 மிஷனெரிகள் நமது ஊழியத்தின் மூலம் தாங்கப்படுகிறார்கள்.
மிஷனெரிகளுக்காக, ஊழியங்களுக்காக திறப்பின் வாசல் ஜெபம் மற்றும் எல்லா ஜெபங்களிலும் பாரத்தோடு ஜெபித்து வருகிறோம். வருடத்திற்கு ஒருமுறை பணித்தளங்களுக்கு நேரில் சென்று மிஷனெரிகளை உற்சாகப்படுத்தி வருகிறோம்.
இந்தியா மட்டுமல்லாது, நேபாளம், இலங்கை போன்ற வெளிதேசங்களில் ஊழியம் செய்யும் மிஷனெரிகளையும் தாங்கி வருகிறோம்.
மிஷனெரி ஊழியத்தின் மூலம் சந்திக்கப்படும் ஆத்துமாக்கள், ஜீவனுள்ள தேவனை கூடி ஆராதிக்க நமது ஊழியத்தின் மூலம் இதுவரை 140 ஆலயங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமல்ல, துரிதமாய் சுவிசேஷத்தை சுமந்து செல்ல வேன்கள், நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள், படக்காட்சி கருவிகள், ஒலிபெருக்கி கருவிகள் மற்றும் வேதபுத்தகங்கள் ஏராளம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மாணவர் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மிஷனெரிகளை மாத்திரமல்ல, ஆதிவாசி பிள்ளைகளையும் நமது ஊழியத்தின் மூலம் தாங்கி வருகிறோம்.
இயேசு விடுவிக்கிறார் ஊழியமும், பீல் மக்களும்
பல வருடங்களுக்கு முன்பாக, குஜராத் மாநிலத்திலுள்ள பீல் மக்கள் நடுவில் ஊழியத்திற்காக சென்றபொழுது, அந்த மக்களைக் குறித்த விசேஷித்த பாரத்தை, தேவன் சகோதரரின் உள்ளத்தில் வைத்தார். இதுதான் அந்த மக்களை தேவன் சந்திக்கும் வேளை என்பதை திட்டமாக அறிந்தவுடன், அந்த மக்களுக்காக அதிகமாக ஜெபிக்கவும், அவர்கள் நடுவில் தியாகத்தோடு, தரிசனத்தோடு ஊழியம் செய்யும் ஷாலோம் ஊழியத்தை தாங்கவும் தீர்மானம் பண்ணினோம்.
அதுமாத்திரமல்ல, வருடம்தோறும் அவர்கள் நடுவில் சென்று, ஊழியர்களுக்கு முகாம்கள் நடத்தி உற்சாகப்படுத்துகிறோம். பணித்தளங்களை பார்வையிட்டு, ஊழியம் செய்து வருகிறோம். ஷாலோம் ஊழிய ஸ்தாபகர் சகோ. தேவதாஸ் அவர்கள் குடும்பத்திற்காக பாரத்தோடு ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கர்த்தரால் ஏவப்பட்ட அநேக தேவப் பிள்ளைகள், மிஷனெரி ஊழியத்தை உற்சாகத்தோடு தாங்கி வருகிறார்கள். ஆலயங்கள் கட்டிவருகிறார்கள். மிஷனெரி ஊழியத்திற்காக அனுப்பப்படும் காணிக்கைகளை மிஷனெரி ஊழியத்தில் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
