நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
ஜெப ஊழியம்
ஜெபமே பிரதானம்
1978ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திங்கட் கிழமை சகோதரரின் சொந்த ஊராகிய நாலுமாவடியிலுள்ள வனாந்திர பகுதியில் ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்த்தர் சகோதரருக்கு கொடுத்த தரிசனத்தில் ஊழிய காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்திய பொழுது மிகுந்த நடுக்கத்தோடு தேவ சமூகத்தில் ஆண்டவரே! நான் சிறுவனாயிருக்கிறேன் நீர் எனக்கு காண்பித்த இந்த பெரிய காரியங்களைச் செய்ய எனக்கு போதிய ஞானமில்லை, பெலன் இல்லை என்னால் முடியாது என்று கதறிய பொழுது கர்த்தர், இதற்காகவே நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், உன்னால் இதைச் செய்ய முடியாததுதான், ஆனால் உன்னைக் கொண்டு என்னால் இதைச் செய்ய முடியும்; ஒரு ஜெபக்குழுவை நீ ஏற்படுத்து, உனக்காக ஜெபிக்கக்கூடிய மக்களை நான் உனக்குத் தருவேன். அவர்களுடைய ஜெபம் உன்னைத் தாங்கும்; இந்த ஜெபக்குழுவின் ஜெபத்தைக் கொண்டு நான் இந்த ஊழியங்களையெல்லாம் நிறைவேற்றுவேன் என்று கட்டளையிட்டார்.
கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து 1978ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நாலுமாவடியில் ஒரு சிறிய வீட்டில் இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழு ஆரம்பிக்கப்பட்டது. சில தேவப்பிள்ளைகளாய் தினமும் இரவில் கூடி இந்தியாவின் எழுப்புதலுக்காக, எல்லா ஊழியர்களுக்காக, ஊழியங்களுக்காக, மிஷனரிகளுக்காக, தேவைகக்ஷேýõடிருக்கிற மக்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பதே இக்குழுவின் தலையாய நோக்கம். ஜெப ஊழியத்தை முளையிலேயே கிள்ளியெறிய சத்துருவான சாத்தான் பல திட்டங்களை தீட்டினான். பலத்த எதிர்ப்பை கொண்டு வந்தான். ஆனால் தேவன் செய்ய நினைத்ததை யார்தான் தடுத்து நிறுத்த முடியும். அற்பமாய் ஆரம்பிக்கப்பட்ட ஜெப ஊழியம் இன்று ஆலமரம்போல் தழைத்து பரவிக் கொண்டிருக்கிறது.
சிலராய் கூடி ஜெபித்து தாங்கிய இவ்வூழியத்திற்கு கண்ணீருடன் ஜெபிக்க இன்று சுமார் 9000 ஜெப நண்பர்களை கர்த்தர் எழுப்பிக் கொடுத்திருக்கிறார். ஜெபிப்பதே இவ்வூழியத்தின் பிரதானமான நோக்கம். ஜெபிப்பதற்கென்று அர்ப்பணிக்கிறவர்கள் மாத்திரமே இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் இணைய முடியும். ஜெபிக்க விரும்பமில்லாதவர்கள் இவ்வூழியத்தில் நிலைத்திருக்க முடியாது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களுக்காக மாத்திரமல்ல தேசத்தின் இரட்சிப்பிற்காக, ஆசீர்வாதத்திற்காக கருத்தாக ஜெபித்து வருகிறோம். தேசத்தை ஆளுகிறவர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனுக்காகவும் விசேஷித்த ஞானத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் பாரத்தோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகிறது.
எத்தனையோ முறை தேசத்தின் சமாதானத்தைக் கெடுக்க சத்துரு கொண்டு வரவிருந்த தீமையான காரியங்களை ஆவியானவர் முன் கூட்டியே வெளிப்படுத்தி ஜெபிக்க வைத்ததின் விளைவாக பல பேரழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜெபிப்பதற்கென்று முழுநேரமாய் ஏழு சகோதரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்டுண்ட மக்களுக்காக, கண்ணீரோடு பாரத்தோடு கடிதம் எழுதுகிற மக்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பதே இவர்கள் பணி. அனுதினமும் அலுவலகத்தை நாடி ஜெபிக்க வருகிற மக்களுக்காக ஜெபிக்க ஆலோசனை வழங்க ஜெபவீரர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொலைபேசி மூலமாக ஜெபிக்க கேட்கிற மக்களுக்காக கண்ணீருடன் மன்றாட 24 மணி நேரமும் ஜெபவீரர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். இந்த ஜெபங்கள் மூலம் இயேசு செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. செவ்வாய்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணிவரையும், வியாழக்கிழமை தோறும் காலை 11 மணி முதல் 3 மணிவரை உபவாசத்துடனும் இயேசு விடுவிக்கிறார் ஊழியக் குடும்பத்தினராய் கூடி ஜெபித்து வருகிறார்கள். தினந்தோறும் இந்தியாவின் ஜாமக்காரர்கள் என்று தேவனால் பெயரிடப்பட்ட ஜெபவீரர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவினராய் வந்து தேவனுடைய வீட்டில் கூடி ஜெபிக்கிறார்கள். மாதத்தின் முதலாவது செவ்வாய்கிழமை காலை முதல் மாலைவரை இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களாய் கூடி உபவாசித்து ஜெபிக்கிறோம்.
பிரதி மாதம் 2வது சனிக்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு இரவு ஜெபம் நடைபெறுகிறது. தேசத்தில் அழிவைக் கொண்டு வர போராடுகிற அந்தகார ஆவிகளின் கிரியைகள் அழிக்கப்பட வெள்ளிக்கிழமை தோறும் நடு இரவில் ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்கள் எழுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 3 மணி வரை தேவசேனை (ஆர்ம்ய் ஒஃப் Gஒட்-) என்ற விசேஷித்த ஜெபக்குழுவினர் கூடி போராட்ட ஜெபங்களை ஏறெடுத்து வருகிறார்கள். அது மாத்திரமல்ல தேசத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்க ஆயிரக்கணக்கான திறப்பின் வாசல் ஜெபக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பின்மாரி என்ற மாதப்பத்திரிக்கை அனுப்பி ஜெபத்தில் உற்சாகப்படுத்தி வருகிறோம். விசேஷித்த காரியங்களுக்காக 24 மணி நேர சங்கிலித் தொடர் ஜெபம் (Cஹைன் Pரயெர்) ஏறெடுக்கப்படுகிறது.
1. கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் என் தாயார் மஞ்சள் காமாலை மற்றும் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தார்கள். மருத்துவர்கள் என் தாயாரை கைவிட்டு விட்டனர். மிகுந்த மனவேதனையோடு கூட நாங்கள் குடும்பமாக இயேசு விடுவிக்கிறார் அலுவலகத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என் தாயாரின் சுகத்திற்காக ஜெபிக்கக் கேட்டுக் கொண்டோம். அவர்களும் மிகுந்த பாரத்தோடு என் தாயாரின் சுகவீனத்திற்காக ஜெபித்தார்கள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு, 7 நாட்களுக்குப் பிறகு என் தாயாருக்கு சுயநினைவைக் கொடுத்து, நல்ல சுகத்தோடு கூட என் தாயாரை வீடு திரும்பப் பண்ணினார். இப்போது ஆண்டவருடைய மகாப் பெரியக் கிருபையினால் என் தாயார் பூரண சுகத்தோடு இருக்கிறார்கள்.
ஸஜி செளந்தர்ராஜ் (அம்மாண்டிவிளை)
2. என் மகள் பிறந்த 7வது மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். காய்ச்சலின் வீரியம் அதிகமாகி 16 மணி நேரங்கள் சுயநினைவற்றவளாக கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தாள். மிகுந்த கண்ணீரோடு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என் மகளுக்காக ஜெபிக்கக் கேட்டுக் கொண்டேன். இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களும் பாரத்தோடு என் மகளுக்காக ஜெபித்தார்கள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு என் மகளுக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து அவள் கண் விழிக்கவும், அந்த நொடிப் பொழுதே ஓடியாடி விளையாடவும் பணித்தார். மருத்துவமனையிலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஜெயகீதா (சென்னை)
