நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
ஜெபமலை
...மலையின் மீது ஏறி இரா முழுவதும் ஜெபம்... லூக். 6:12
எழுப்புதலுக்கு அர்ப்பனம்
எதற்காக இந்த மலைப்பிரதேசம்? எதற்காக இவ்வளவு பெரிய இடம்? இங்கு என்ன நடை பெறப் போகிறது? என்ற கேள்விகள் எழும்பலாம்!
நானும் இந்தக் கேள்விகளை ஆண்டவருக்கு முன்பாக வைத்து ஜெபித்தேன். தேவனுடைய பாதத்தில் காத்திருந்தபோது ஆண்டவர் தெளிவான ஆலோசனை கொடுத்தார். இந்த மலைப் பிரதேசம் முழுவதும், நம் இந்திய தேசத்திற்காக தேவப் பிள்ளைகள் கூடி ஜெபிப்பதற்காகவே அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக, கர்த்தருடைய வழி நடத்துதல்படி, இரண்டு மலைகளுக்கு நடுவிலுள்ள உயரமான இடத்தில் ஒரு ஜெபக்கோபுரத்தை ( Prayer Tower) கட்டவிருக்கிறோம்.
இந்த ஜெப கோபுரத்தில் நம் இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, இரட்சிப்பிற்காக இரவும், பகலும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தைக் குறித்த விபரங்களும், தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களைக் குறித்த விபரங்களும் ஜெபத்திற்காக இங்கு வைக்கப்படும்.
தேவப் பிள்ளைகள் யார் வேண்டுமானாலும் இந்தக் கோபுரத்தில் வந்து ஜெபிக்கலாம். அதற்கு ஏற்றபடி சிறு சிறு ஜெப அறைகள் இருக்கும். குழுவாக வந்து ஜெபிக்கவும் இடவசதியிருக்கும். சுயநலமில்லாமல், தேசத்திற்காக ஜெபிக்கிறவர்கள் மட்டுமே ஜெப கோபுரத்தில் ஜெபிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதை அடுத்து, ஜெப நடைத் தோட்டம் (PRAYER WALK GARDEN) அமைக்கப்படும்.
இந்தத் தோட்டத்தில் 70 ஜெப மையங்கள் இருக்கும். இந்தியாவின் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்கள், உலகின் 5 கண்டங்கள் என்று ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு மாநிலம் அல்லது மாவட்டங்களைக் குறித்த விபரங்கள் வரைபடத்தோடும், அவைகளுக்குரிய ஜெபக் குறிப்புகக்ஷேýõடும் அமைக்கப்படும். அங்கு முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஏற்ற வசதி செய்யப்படும். தேசத்திற்காக ஜெபிக்கிறவர்கள் மட்டுமே ஜெபநடைத் தோட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
இதை அடுத்து, ஜெபக் கிராமம் (PRAYER VILLAGE) அமைக்கப்படும்.
மூன்று மலைகளின் நடுவில், மலை அடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைக்கப்படும். இங்கு 70 Cottages கட்டப்படும். குடும்பமாக, குழுவாக வந்து தங்கி இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்க விரும்புகிறவர்கள் இங்கு வந்து தங்கி ஜெபிக்கலாம். குடும்பமாக உபவாசித்து ஜெபிக்கிறவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார்கள். அடுத்து, மலையை ஒட்டி 70 சிறிய ஜெப அறைகள் (PRAYER CELLS) கட்டப்படும்.
ஒருவர் உள்ளே போய் முழங்கால் படியிட்டு ஜெபிக்கிற அளவில் இந்த ஜெப அறை இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு மாநிலத்தின் விபரமும் ஜெபக் குறிப்பும், அல்லது ஒரு மாவட்டத்தின் விபரமும் ஜெபக்குறிப்பும் இருக்கும். தனித்து ஜெபிக்கச் செல்கிறவர்கள், முதலாவது அங்குள்ள குறிப்புகளுக்காக ஜெபித்து விட்டு, பின் தங்கள் சொந்த காரியங்களுக்காக ஜெபிக்கலாம்.
ஜெப மாளிகை (PRAYER PALACE)
சுமார் 5000 பேர் அமர்ந்து ஜெபிப்பதற்கு வசதியாக ஜெப மாளிகை ஒன்று கட்டப்பட விருக்கிறது. வரும் நாட்களில் 3 நாட்கள் திறப்பின் வாசல் உபவாச ஜெபமுகாம்கள் இங்கு வைத்து நடைபெறும். இம்முகாமிற்கு வருகிற மக்கள் தங்குவதற்கு வசதியாக எஸ்தர் மாளிகை, மொர்தெகாய் மாளிகை கட்டப்படவிருக்கிறது. மேலும் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதாகமத்தை தேவபிள்ளைகள் தெளிவாக அறிந்து கொள்ள வசதியாக வேதாகம உலகம் ஒன்று நிறுவப்படவிருக்கிறது.
- சகோ. மோகன் சி. லாசரஸ்
தற்சமயம் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலையில் தேவப்பிள்ளைகள் கூடி தேசத்திற்காக ஜெபித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் நாலுமாவடியில் நடக்கிற திறப்பின் வாசல் ஜெப நாளுக்கு முந்தின வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 3 மணி வரை ஜெபமலையில் திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறுகிறது. சுமார் 4000 தேவபிள்ளைகள் கூடி வந்து ஜெபிக்கிறார்கள். ஜெபிக்க வருகிறவர்களை தேவன் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார்.
முழு நேரமாய் ஒரு ஊழிய குடும்பம் அங்கு தங்கியிருந்து ஜெபிக்க வருகிற ஜனங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. ஜெபத்தோட்டம் அமைக்கிற வேலை நடைபெற்று வருகிறது. இரண்டு ஜெபக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அநேகர் வந்து ஜெபித்துவிட்டு செல்கிறார்கள். வரும் நாட்களில் இந்த ஜெபமலை எழுப்புதல் ஸ்தலமாக விளங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
25 வருடங்களாக தீராத தலைவலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். எவ்வளவோ மருந்துகள் எடுத்தும் தலைவலி குணமாகவே இல்லை. தலைவலி வரும்போது எல்லாம் ஒரு மரண பயம் என்னை ஆட்கொள்ளும். ஜெபமலையில் நடைபெற்ற திறப்பின் வாசல் ஜெபத்தில் கலந்து கொண்டேன். ஜெபவேளையில் தேவ வல்லமை என்மேல் இறங்கி வந்தது. 25 வருடங்களாக இருந்து வந்த தலைவலி ஒரு விநாடியில் என்னை விட்டு மறைந்து போனது.
சேஷம்மாள் (சங்கரன்குடியிருப்பு)
பில்லி சூனிய வல்லமையினால் என் குடும்பம் பாதிக்கப்பட்டிருந்தது. இதினிமித்தம் என் உடன் பிறந்த அனைவரும் மரித்து விட்டனர். நானும் ஒவ்வொரு நாளும் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஜெப வேளையில் பரிசுத்த ஆவியானவர் என் மேல் இறங்கி வந்தார். அபிஷேகத்தின் வல்லமை நான் பெற்றுக் கொண்ட போது பில்லி சூனியத்தின் வல்லமை அழிக்கப்பட்டது. இப்போது நான் பூரண விடுதலையுடன் இருக்கிறேன்.
