24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

சமுதாயப் பணிகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு சமுதாயப் பணிகள்

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். நீதி. 19:17

எளியவன் மறக்கப்படுவதில்லை

எனது சொந்த ஊரான நாலுமாவடியைச் சுற்றிலும் பல சிறிய கிராமங்கள் இருக்கிறது. இங்கு வசிக்கிற ஏராளமான ஏழை மக்கள் சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள் என்று புறக்கணிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

படிப்பறிவில்லாத இந்த ஏழை மக்களும் இரட்சிக்கப்பட்டு தேவப்பிள்ளைகளாக வேண்டும் என்ற பாரத்தை ஆவியானர் கொடுத்தார். இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறிவித்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள மனமற்றவர்களாயிருக்கிற இம்மக்களுக்கு இயேசுவின் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் 1978ம் ஆண்டு இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கைளக் குறித்து கர்த்தர் கொடுத்த தரிசனங்களை ஞாபகப்படுத்தினார். கர்த்தர் கொடுத்த தரிசனத்தின்படி மருத்துவமனை ஊழியத்தின் மூலம் இந்த மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க ஏவினார். அதன்படி 1988ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பெதஸ்தா மருத்துவமனை ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வூழியம் நடைபெறுகிறது. வாரந்தோறும் சுமார் 250 ஏழை மக்கள் இலவச மருத்துவ உதவிகளை பெற்று வருகிறார்கள். வருகிற ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக கிறிஸ்துவின் அன்பை கூறி ஜெபித்து அனுப்புகிறோம். இயேசுவின் வல்லமையை அறிந்திருந்தும் அவரை புறக்கணித்திருந்த இப்பகுதி மக்கள் இவ்வூழியத்தின் மூலம் இயேசுவின் அன்பினால் சந்திக்கப்படுகிறார்கள்.

- சகோ. மோகன் சி. லாசரஸ்

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்காக ரூ.23 செலவில் 52 தரமான வீடுகள் கட்டி கொடுக்க தேவன் உதவி செய்தார்.

சுனாமியினால் படகுகளை இழந்த பலருக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தும், விசைப் படகுகள், மீன்பிடி வலைகள் வாங்கிக் கொடுத்தும் அவர்கள் வாழ்வு மலர ஆவன செய்தோம்.

பலவிதங்களில் சமுதாய தொண்டு செய்ய கர்த்தர் ஏவினபடியால் 1995ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி புது வாழ்வு சங்கம் உதயமானது. இது இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்கள்

இந்நிறுவனத்தின் மூலம் தோல் வியாதிகள், கண் நோய்கள் மற்றும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகத்திற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அந்த மக்கள் சந்தோஷமாக வாழ வழி செய்யப்படுகிறது. 2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு அமைச்சர் கீதா ஜீவன், மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஆகியோர் வந்திருந்து முகாமை சிறப்பித்தனர்.

இலவசமாக தொழிற்கல்வி

உடல் ஊனமுற்ற பலருக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏழை வாலிப பெண்கள் பயன்பெறுவதற்கு வசதியாக தொற்காள் தையல் பள்ளி இயங்கி வருகிறது. இதன் மூலம் இலவசமாக தொழிற்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

பூகம்ப நிவாரணம்

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்காக ஆதரவு கரம் நீட்டினோம். ரூ.23 லட்சம் செலவில் 52 தரமான வீடுகள் கட்டி கொடுக்க தேவன் உதவி செய்தார்.

சுனாமி

சுனாமியினால் பாதிக்கப்பட்ட கடற்கரையோர மக்களுக்கு நமது ஊழியத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்து. தங்கள் படகுகளை இழந்த பலருக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டி கொடுத்தும், விசைப் படகுகள், மீன்பிடி வலைகள் வாங்கிக் கொடுத்தும் அவர்கள் வாழ்வு மலர ஆவன செய்தோம்.

IAS, IPS பயிற்சி முகாம்கள்

இன்றை வாலிபர்கள் நாளைய தலைவர்கள் எனவே சிறந்த தலைவர்கள் உருவாக வேண்டுமென்ற தரிசனத்தோடு ணூபுறீ, ணூறீ தேர்வு எழுத விரும்புகிறவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கால்பந்து, கைப்பந்து போட்டிகள்

விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க அத்துறையில் ஆண்டவருக்கு சாட்சியுள்ளவர்கள் எழும்ப நமது ஊழியத்தின் சார்பில் கால்பந்து, கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு சுவிசேஷமும், ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

ஏழைகள் மேற்படிப்பு உதவி

மேலும் நமது ஊழியத்தின் மூலம் அநேக ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறோம். மருத்துவராக, இஞ்ஜினியராக, நர்ஸாக படிக்க விரும்பின பலருக்கு உதவி செய்கிறோம். சிலரை கம்யூட்டர் துறையிலும், சிலரை வீடியோ எடுக்கும் துறையிலும் சேர்த்து அவர்கள் வாழ்வு சிறக்க உதவுகிறோம். ஆசிரியர் பயிற்சி படிப்பதற்கும், கல்லூரி மேற்படிப்பு படிப்பதற்கும், வேதாகம கல்லூரியில் படிப்பதற்கும் பலருக்கும் உதவி செய்கிறோம்.

குழந்தைகள் காப்பகம்

அதுமாத்திரமல்ல Compassion நிறுவனத்தின் உதவியுடன் அநேக சிறுபிள்ளைகள் படிப்பதற்கும், வளமான வாழ்வு வாழ்வதற்கும் புதுவாழ்வு குழந்தைகள் காப்பகம் ஒன்று நமது ஊழியத்தின் சார்பில் செயல்பட்டு வருகிறது.

மருத்துவ உதவி

மருத்துவ உதவி நாடி வருகிற அநேகருக்கு நமது ஊழியத்தின் மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி சுற்று வட்டாரத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் அதியாவசிய மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்தின் மூலம் Mஉல்டி Sபெகிஅலிட்ய் ஃஒஸ்பிடல் ஒன்று கட்டுவதற்கும், ஒரு ஆம்புலன்ஸ் வாங்குவதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

வருடந்தோறும் பேய்குளம் தொழுநோய் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு கிறிஸ்மஸ் செய்தியோடு புத்தாடைகளும், உணவும் வழங்கி சந்தோஷப்படுத்துகிறோம்.

டாக்டர். அன்புராஜன் :

புதுவாழ்வு சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வரும் டாக்டர். அன்புராஜன் மருத்துவராக இருந்தும், ஊழியத்தில் காட்டும் ஈடுபாடு ஆச்சரியப்படத்தக்கது. புதுவாழ்வு சங்கத்தின் ஆரம்பகால செயல்பாடுகள் மருத்துவம் சார்ந்ததாக இருந்தாலும், சுயதொழில், தையல் பயிற்சி, கல்வி உதவி, புறக்கணிக்கப்பட்டோருக்கு நல உதவி என விரிவாக்கம் அடைந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு இடங்களில் நமது ஊழியத்தின் சார்பாக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

Back

முக்கிய செய்திகள்

12-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு