24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

தேவனுடைய கூடாரம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு தேவனுடைய கூடாரம்

என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்... 1. இராஜா 9:3

வானத்தின் வாசல்

1980ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட திறப்பின் வாசல் ஜெபம் 1984ம் ஆண்டுவரை தென்னந்தோப்பில் வைத்து நடைபெற்றது. பலநூறு தேவப்பிள்ளைகள் இதில் கலந்து கொண்டார்கள். 1985ம் ஆண்டுமுதல், தேவனுடைய வீடு வளாகத்தில் பந்தல் போட்டு நடத்தி வந்தோம். திறப்பின்வாசல் ஜெபம் மற்றும் முகாம்கள் நடத்துவதற்கு பெரிய ஹால் ஒன்று அவசியம் தேவையென்று உணர்ந்தபொழுது, 1978ம் ஆண்டு வனாந்தரத்தில் சகோதரர் ஜெபித்தபொழுது, கர்த்தர் வெளிப்படுத்திய திட்டங்களுள் ஒன்றான தேவனுடைய வீடு திட்டத்தை உடனே நிறைவேற்ற ஆவியானவர் ஏவினார்.

பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் தேவனுடைய வீடு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், தேவனுடைய வீடு கட்டி முடிப்பதற்குள், அந்த ஹால் நிரம்பி வழியும்படி திரள் கூட்ட மக்களை கர்த்தர் கூட்டிச் சேர்த்தார். மிகுந்த சிரமங்களுக்கு நடுவில், சில வருடங்களாக தேவனுடைய வீட்டில் திறப்பின் வாசல் ஜெபம் மற்றும் முகாம்களை நடத்தி வந்தோம். பின்பு, சுமார் 20,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான கூடாரம் அமைக்கப்பட்டு, தற்பொழுது அங்கு திறப்பின் வாசல் ஜெபம் நடைபெற்று வருகிறது. இந்த இடமும் நிரம்பி வழிந்தபொழுதுதான், சுமார் 50,000 பேர் அமரக்கூடிய வகையில் மாபெரும் தேவனுடைய கூடாரத்தை கட்டியெழுப்ப தேவன் கட்டளையிட்டார். இதற்காக, சுமார் 8 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த தேவப் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த பொழுது, இது தேவசித்தம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்.

2003ம் ஆண்டு இதற்கான அஸ்திபாரம் போடப்பட்டு, வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது கட்டி முடிக்கப்படும்பொழுது, சுமார் 50,000 தேவப் பிள்ளைகள் எவ்வித தடையுமின்றி நேரடியாக மேடையை பார்த்து, கர்த்தருடைய வார்த்தையை கேட்கும் வசதி உண்டாயிருக்கும். இந்தியாவின் எழுப்புதலுக்காக, 24 மணி நேரம் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும் ஜெபகோபுரம் ஒன்று செயல்படும். 7 மாடி கட்டிடங்களில் இயேசு விடுவிக்கிறார் அலுவலகம் செயல்படும்.

இதுவரை ஒரு குறையுமின்றி கர்த்தர் இதன் தேவைகளை சந்தித்து வருகிறார். தற்பொழுது, கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீக்கிரத்தில் வேலைகள் முடிக்கப்பட்டு இந்திய தேசத்தின் மாபெரும் எழுப்புதலுக்காக பிரதிஷ்டை செய்யப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.

சகோதரர் அவர்களுக்கு தேவனுடைய வீடு தரிசனத்தைக் கர்த்தர் கொடுத்தபோது போதகர் தைரியநாதன் அவர்களுக்கும் தேவன் தரிசனம் கொடுத்து கட்டிடப் பணியில் உதவி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த நாள் வரை அனைத்து கட்டிடப் பணிகளிலும் சகோதரருக்கு உதவியாக நின்று காரியங்களை கவனித்துக் கொள்கிற தேவனுடைய ஊழியக்காரர்.

 
சாட்சிகள்

நான் ஒருமுறை, திருச்சியிலுள்ள இயேசு விடுவிக்கிறார் கிளை அலுவலகத்திற்குச் சென்றிருந்த சமயம், அங்கிருந்த இயேசு விடுவிக்கிறார் பத்திரிகையை வாங்கி, அதில் ஒரு சகோதரர், தேவனுடைய கூடாரப் பணிக்குக் காணிக்கை கொடுத்ததினிமித்தம் அடைந்த பலனை சாட்சியாக எழுதியிருந்ததை வாசித்தேன். நானும், விசுவாசத்தோடு ரூ. 1000/ தேவனுடைய கூடாரக் கட்டுமான பணிக்காகக் கொடுத்தேன். கர்த்தர் அதை எனக்குப் பல மடங்காக ஆசீர்வதித்து, 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனை வாங்க கிருபை செய்தார்.

- ஹோல்டார் அலோஸ்டர் (திருச்சி)

தேவனுடைய கூடார கட்டுமானப் பணிக்காக ரூ. 300 அனுப்பிவிட்டு நாங்கள் எங்களுக்கென புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு தேவன் அற்புதமாக வழிநடத்தி சுமார் 13 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டை கட்டி கொடுத்தார். நாங்கள் சிறிய வீடுதான் கட்ட வேண்டுமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் முதலில் தேவனுடைய கூடாரத்திற்கு ஒரு பகுதியை அனுப்பிவிட்டு பின்பு எங்கள் வீட்டைக் கட்ட வேண்டுமென்று தீர்மானித்தோம். தேவனுக்கென்று கொடுப்பவர்களை, தேவன் ஒருபோதும் வெட்கமடைய செய்வதில்லை என்று தேவன் எங்கள் வாழ்க்கையில் நிரூபித்திருக்கிறார்.

- மார்கிரெட் அந்தோணி (திருவிதாங்கோடு)

இனி நீங்கள் அழவேண்டாம்

என் 2 வயது குழந்தை மரித்துவிட்டாள். சகோதரர் மோகன் சி.லாசரஸ் கண்ணீரோடு ஜெபம் செய்தார். இன்று Msc படித்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லும் சகோதரி டெய்ஸி ஞானராஜ் வசிப்பது மதுரை பட்டணத்தில்.

என் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். என் கணவருக்கு கார் வாங்கி விற்கும் தொழில்.

1990ம் வருடம் புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை கேட்பதற்காக நாலுமாவடி செல்ல தீர்மானித்தோம். ஆனால் என் கணவரால் வரமுடியவில்லை. நானும் என் கைக் குழந்தை ஏஞ்சலும் கலந்து கொள்ள திட்டமிட்டோம். நாலுமாவடி போகிறோமே அப்படியே என் உறவினர் வீட்டிற்கு போய் புத்தாண்டு ஆராதனையை அவங்களோட சர்ச்ல கொண்டாடுவோமுன்னு மதுரையில இருந்து சாத்தான்குளம் வந்தோம். சாத்தான் குளத்திலிருந்து சுமார் ஏழு, எட்டு கிலோ மீட்டர் தாண்டி டக்கரையர்புரம்தான் உறவினர் வீடு. ரோடு வசதியில்லாத சீமை ஒடை நிறைஞ்ச காட்டு பகுதிகளுக்குள்ளே போய் நின்றது பஸ். பஸ் நின்ற இடத்துல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகள். டக்கரையர்புரம் இறங்குங்க என்று கண்டக்டர் சொன்னதும் இறங்கினோம். அப்போ என் மகள் ஏஞ்சலுக்கு 2 வயது. பிஞ்சு உடம்புல பஸ் பிரயாணத்தினால் மேல் வலித்து ரொம்பவும் அழுதாள்.

அன்று 1989ம் வருடம் 31ம் தேதி. உலகமே புது வருடத்தை மகிழ்ச்சியின் எல்லைவரை சென்று வரவேற்க தயாரான நேரம். அன்று இரவு பழைய வருடபுது வருட ஆராதனை ஆலயங்களில் நடப்பது வழக்கம். டக்கரையர்புரம் C.S.I. ஆலயத்தில் ஆராதனை செய்ய ஊரே திரண்டு வந்தது. ஆனால் என் மனம் ஏனோ அடுத்த நாள் நடக்கவிருந்த நாலுமாவடி புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டத்திற்காக ஏங்கி நின்றது.

புதுவருட ஆராதனை முடிந்து மதியம் கறி குழம்பு சேõறு சாப்பிட்டுவிட்டு நேரமே நாலுமாவடிக்கு மதியம் 1 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம். நாலுமாவடி என்ற கிராமமே மக்கள் வெள்ளத்தினால் மூச்சுவிடமுடியாமல் திணறி இருந்தது. பந்தலுக்குள் அமர இடம் இல்லாததால் வெளியே மாமரத்தின் கீழிருந்து கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தோம். கூட்ட முடிவில் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்களிடம் ஜெபித்துக் கொண்டோம். அன்று நான் அனுபவித்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கூட்டம் முடிந்து மிகுந்த மக்கள் நெருக்கடிக்கு இடையே நாசரேத் வந்து டக்கரையர்புரம் சென்றோம். என் கணவருக்கு நாளை மதுரை வருவதாக Phone செய்தேன் நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல்.

இரவு சமார் 9 மணி இருக்கும் திடீரென்று குழந்தை ஏஞ்சலுக்கு பிட்ஸ் வந்து கை காலெல்லாம் இழுத்துக் கொண்டேயிருந்தது. பேச்சு மூச்சு இல்லாமல் போனது. ஆனால், மிகுந்த அழுகைக்கு இடையே பக்கத்தில் அவசரத்துக்கு ஒரு மருத்துவமனையும் இல்லாததால் சாத்தான்குளம் தூக்கிகொண்டு ஓடினோம். நான் அழுதேன். எல்லாரம் அழுது கொண்டேயிருந்தோம். மருத்துவமனையில் குழந்தையை காண்பித்தபோது டாக்டர் நெஞ்சு பகுதியை அமுத்தி பார்த்துவிட்டு ஊசி ஒன்று போட்டார், கொஞ்சம் இழுத்துக் கொண்டிருந்த மூச்சும், சுவாசமும் சிறிது நேரத்தில் நின்றது. நானோ எதுவுமறியாமல் அழுது கொண்டேயிருந்தேன். டாக்டர் உள்ளே சென்று நர்ஸ்களிடம் ஏதோ பேசினார். பயத்தில் ஒட்டு கேட்டபோது குழந்தை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று சொன்னது காதில் கேட்டது. ஆஸ்பத்திரியிலேயே வீரிட்டு அழுதேன். அக்கம்பக்கத்திலிருக்கிறவர்களெல்லாரும் சமாதானம் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை. டாக்டர் எங்களை சமாதானப் படுத்துவதற்காக திருநெல்வேலி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள் என்றார். நான் உடனே நாலுமாவடிக்கு குழந்தையை கொண்டு செல்வோம் என்று விடாப்பிடியாக கூறிவிட்டேன். எல்லாரும் உயிரற்ற சடலமாய் கிடந்த அக்குழந்தையை தூக்கி கொண்டு இரவு 11 மணிக்கு கண்ணீரோடு காரிலே நாலுமாவடி வந்து சேர்ந்தோம். அப்போ இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திலே ஊழியம் செய்யும் சகோதரர் அகஸ்டின் என்ன வென்று கேட்டார். நாங்கள் நிலைமையை சொன்னோம். எங்கள் கண்ணீரை பார்த்து சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள் எழுப்பி வந்தார்கள். அவருடன் இரண்டு சகோதரர்கள் வந்தார்கள். அப்பொழுதுதான் இன்னொரு கூட்டத்திலும் செய்தியளித்துவிட்டு சகோதரர் அவர்கள் சேõர்ந்துபோய் காணப்பட்டார்கள். சகோதரரிடம் அழுதோம். என் மகள் ஏஞ்சலின் தொண்டைகுழியில் உயில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சகோதரர் தேவனுடைய வீடுமுன் அறையிலே எங்களோடு முழங்கால்படியிட்டு அழுது கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். அழகை சத்தத்தால் அந்த இடமே மிகுந்த ஓலமாயிருந்தது.
பிள்ளையின் உயிர் திரும்பவேண்டும் என்று சுமார் 1மணி நேரம் சகோதரர் அழுது ஜெபித்து கொண்டேயிருந்தார்கள். உயிர்வராமல் இயேசுவே உம்மை விடமாட்டோம் என்று கதறி ஜெபம் செய்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து இரவு பண்ணிரெண்டரை மணிக்கு கண் திறந்து சகோதரர் சொன்னார். இயேசு வந்து இந்த பிள்ளையை தொட்டுவிட்டு புன்முறுவலோடு என்னை பார்த்து சிரித்தார். இனி நீங்கள் அழவேண்டாம் பிள்ளை பிழைத்துவிடும் என்று கூறினார். அழகையை துடைத்து கொண்டிருக்கும் போதே கை, கால்களை மகள் ஏஞ்சல் அசைத்தாள். நிம்மதியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றோம். இரவே முழு ஜீவனோடு எங்களோடு விளையாட ஆரம்பித்துவிட்டாள். இருந்தாலும் என் கணவர் மதுரையில் பெரிய ஆஸ்பத்திரியில் அவருடைய திருப்திக்காக அட்மிட்செய்தார். டாக்டர்கள் மூளை நரம்பு செயலிழந்துவிட்டது வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடவேண்டும் என்றார்கள். நான் சொன்னேன் என் கண் பார்க்க மரித்த இவள் உயிரோடு இருக்கிறாள். இனி மாத்திரை சாப்பிட அனுமதிக்கமாட்டேன் என்றேன். இன்று அதன்பிறகு 18 வருடம் முடிந்துவிட்டது. பூரண சுகத்துடன் இருக்கிறாள். இப்போ MCA Final Year படிக்கிறாள் அதுவும் படிப்பில் மெடலிஸ்ட் என்று ஆனந்தக் கண்ணீருடன் நம்மிடம் மகள் உயிர் பெற்ற சாட்சியைக் கூறி முடித்தார்

சகோதரி டெய்ஸி.

Back

முக்கிய செய்திகள்

12-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு