நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
தொலைக்காட்சி ஊழியம்
ஆத்துமாவுக்கு நற்செய்தி
தீர்க்கதரிசனம்
சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்ற ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அன்புக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இயேசு விடுவிக்கிறார் தொலைக்காட்சி ஊழியம். 30 ஆண்டுகளுக்கு முன்பாக சகோதரரைக் குறித்து முன்பின் தெரியாத ஒரு சகோதரி அவர்களுக்காக ஜெபிக்கும்போது தொலைக்காட்சி ஊழியத்தில் நான் உன்னை பயன்படுத்துவேன் என்று தீர்க்கதரிசனமாக அவர்கள் மூலம் ஆண்டவர் பேசினார்.
சொன்னதை அப்படியே செய்கிறவர்
அன்றைய சூழ்நிலையில் அது முற்றிலும் நம்ப முடியாததாயிருந்தது. இதெல்லாம் நடக்குமா? என்று கனவில் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை... ஆனால் வாக்குப் பண்ணிய ஆண்டவர் உண்மையுள்ளவர்.. அவர் மாறாதவர்... அவர் சொன்னதை அப்படியே செய்கிறவர் என்பது 1996ம் ஆண்டு நிரூபணமானது. 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி நல்வரவு 96 (Wஎல்கொமெ 96) என்ற நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி (GஏC TV) மூலமாக ஒளிபரப்ப தேவன் கிருபை செய்தார். புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியடங்கிய அந்த நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவர் வல்லமையாக ஜனங்களை ஆசீர்வதித்தார். இதனை அறிந்த அந்த தொலைக் காட்சி நிலையத்தார் உங்கள் நிகழ்ச்சியை மக்கள் மிகவும் விரும்புகின்றனர், ஆகவே ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்ப நேரம் தருகிறோம் என்று சொல்ல ஆண்டவர் இயேசுவிடம் விணவியபோது. அவரும் ஆம் என்று பதில்கூற 1997ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் ஈஸ்டர் தினத்தன்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையான வார்த்தைகளுடன் இந்த ஜீவனுள்ள சுவிசேஷப்பணி உங்கள் அற்புதத்தின் நேரம் என்ற நிகழ்ச்சியாக ஆரம்பமானது. இன்றுவரை அன்று முதல் இந்த ஊழியம் தடையின்றி நடந்து வருகிறது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சுத்த கிருபையே!
செல்ல முடியாத வீடுகளுக்கு
2001ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிலுந்து சிறுவர்களுக்கென்று ஜாலிடைம், வாலிபர்களுக்கென்று வாலிபர் உலகம் மற்றும் உங்கள் ஆசீர்வாத நேரம் நிகழ்ச்சிகளும் 2003 ஜூன் 15ம் தேதியிலிருந்து ஹிந்தி மொழி பேசும் மக்கள் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க சிவீளீ வீõ யில் ஹிந்தி நிகழ்ச்சிகளும் 2007 ஜூலை மாதத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்காக Pஒவெர் Vஇஸிஒன் TV- யிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம், சுவிசேஷம் சொல்ல முடியாத வீடுகள், கிராமங்கள், பட்டணங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் சென்று அதினிமித்தம் ஏராளமான மக்கள் பரலோகத்தில் பெயரெழுதப்பட ஆண்டவர் இயேசுகிறிஸ்து கிருபை பாராட்டி வருகிறார். சிறு நாடகங்கள், பாடல்கள், சாட்சிகள், கலந்துரையாடல்கள், சிறப்பு பேட்டிகள் என பலவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதனால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து பயனடைகின்றனர்.
மெய்யான விடுதலை
இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மனமாற்றமடைவது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தரும் மெய்யான விடுதலையையும் சந்தோஷத்தையும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊழியம் ஆரம்பிக்கப்பட்டபொழுது எந்தவொரு உபகரணங்களும் நம்மிடம் கிடையாது. வாடகைக்கு கேமராக்கள் எடுத்து, பணம் கொடுத்து எடிட் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினோம். மக்களிடம் எவ்வித பிரதிரலனையும் எதிர்பாராமல் ஆத்தும ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டபடியால் கர்த்தர் ஒவ்வொன்றாய் கொடுத்து ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். இன்று பலவித அதிநவீன கேமராக்கள் மற்றும் எடிட்டிங் கருவிகளைத் தந்து அவருடைய ஊழியத்தை துரிதமாய் நிறைவேற்ற வழி செய்திருக்கிறார். இல்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனுக்கு இது சாதாரண காரியம் தானே!
ஒளிப்பதிவு நிலையம்
அதுமட்டுமல்லாமல் செய்திகளை பதிவு செய்ய ஒவ்வொரு முறையும் சகோதரர் சென்னை செல்ல வேண்டியிருந்தது மிகுந்த சிரமமாயிருந்தபடியால், அதற்காக ஜெபித்தபோது 2001ம் ஆண்டு நாலுமாவடியில் ஒரு ஒளிப்பதிவு நிலையத்தை (Shooting Floor) கட்டியெழுப்பி ஊழியம் சிறப்பாய் நடைபெற கர்த்தரே வழி செய்தார். சென்னையிலும், நாலுமாவடியிலும் எடிட்டிங் நிலையங்களை அமைக்கவும் உதவி செய்தார்.
தேவப்பிள்ளைகள்
தொலைக்காட்சி ஊழியம் வளர்ச்சியடையவே அதனை நிறைவேற்றத்தக்க தேவப்பிள்ளைகளை கர்த்தரே கொண்டு வந்தார். ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்துள்ள 33 பேர் இந்த தொலைக்காட்சி ஊழியத்தில் முழுநேர ஊழியர்களாக பணியாற்றி கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை கட்டியெழுப்பி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இவ்வூழியத்தை செய்யத் தொடங்கிய தொழுது அதன் தேவைகள் மிகவும் அதிகமாயிருந்தபடியால் ஆண்டவரிடம் முறையிட்ட வேளையில் கர்த்தர் ஊழியத்தின் தேவைகளை நான் சந்திப்பேன். தாங்கும் மக்களை நான் எழுப்பித் தருவேன் என்று வாக்கு தந்தார். அதன்படியே மாதந்தோறும் ரூ. 100/ கொடுத்து இந்த ஊழியத்தைத் தாங்கும் ஏராளமான பங்காளர்களை கர்த்தர் எழுப்பித் தந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் முழு நிகழ்ச்சியின் செலவீனங்களை பொறுப்பெடுக்கும் குடும்பங்களையும் கர்த்தர் தந்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவரே இதன் தேவைகளை குறைவில்லாமல் சந்தித்து வருகிறார்.
ஒன்றுமில்லாத சூழ்நிலையில் அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி ஊழியம் மூலம் இன்று பல டி.வி. சேனல்கள் மூலமாக 13 விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மாறாத கிருபையும் அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்ன தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதலுமே. இந்த ஈடு இணையற்ற ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் நீங்களும் பங்காற்றலாம். இதை வாசிக்கிற நீங்கள் இந்த ஊழித்திற்காக தினமும் 10 நிமிடங்களாவது ஜெபியுங்கள். மாதந்தோறும் ரூ. 100/ அனுப்பி அல்லது ஒரு நிகழ்ச்சியின் செலவுகளை உங்கள் குடும்பம் சார்பாக பொறுப்பெடுக்கலாம். தாலந்து படைத்தவர்கள் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் திறமைகளை நாடகம் மற்றும் பாடல்களில் நடிக்க அல்லது நிகழ்ச்சி தொகுத்து வழங்க இவ்வூழியத்தில் பயன்படுத்தலாம். ஆண்டவர் உங்களுக்கு செய்த நன்மைகளை உலகுக்கு சாட்சியாக அறிவிக்க முன்வரலாம்.
எப்படியாகிலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக அழிந்து கொண்டிருக்கும் நம் தேச மக்கள் இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்று நித்திய வாழ்வில் பங்கடைய வேண்டும் என்பதே எங்கள் பரதானமான நோக்கமும், தீராக வாஞ்சையும், அனுதின விண்ணப்பமுமாகும். நாம் எல்லோரும் இணைந்து இந்த மாபெரும் பணியில் செயலாற்றி கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவோம்.
சாட்சி அடுத்தப் பக்கம் மேலும் >>
