24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

திறப்பின் வாசல் ஜெபம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு திறப்பின் வாசல் ஜெபம்

 
தேசத்தை காக்கும் தேவசேனை

1980ம் வருடம் ஜனவரி மாதத்தில் திறப்பின் வாசல் ஜெபம் கர்த்தரால் ஆரம்பிக்கப்பட்டது. மாதத்தில் ஒரு நாள் உபவாசத்தோடு தேவைகளோடிருக்கிற மக்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்க கர்த்தர் ஏவினார். திறப்பின் வாசல் ஜெபத்தில் ஜெபிக்க அநேகர் கடிதம் எழுத ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் சகோதரர் மாத்திரம் மாதத்தில் ஒரு வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை கடிதங்களை வாசித்து ஜனங்களின் தேவைகளுக்காக பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். பின்பு தேவனின் வழிநடத்துதல்படி ஜெபக்குழுவிலுள்ள தேவபிள்ளைகளும் உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் பெரிய காரியங்களை செய்தார். கர்த்தருடைய கிரியைகளை கேள்விப்பட்டு பல தேவப்பிள்ளைகள் இந்த ஜெபத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

கர்த்தருடைய வழி நடத்துதல்படி இப்பொழுது ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணிவரை தேவனுடைய வீடு வளாகத்தில் இந்த ஜெபம் நடைபெறுகிறது.
தேசத்தின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 25,000 தேவப்பிள்ளைகள்கூடி திறப்பிலே நின்று ஜெபித்து வருகிறார்கள்.

திறப்பின் வாசல் ஜெபத்திற்கு வரும்படி பத்திரிகை மூலமாகவோ, நோட்டீஸ் விளம்பரம் மூலமாகவோ யாருக்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. கர்த்தர் செய்கிற கிரியைகளைக் கண்டு தனி மனிதனில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வூழியம் இன்று தமிழ் உலகமே பேசும் ஊழியமாக மாறிவிட்டது.

திறப்பின் வாசல் ஜெபத்தில் பாடல் ஆராதனையைத் தொடர்ந்து முதலாவது தேசத்தின் ஷேமத்திற்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறது. பின்பு திருச்சபைகளுக்காக, மிஷனெரி ஊழியங்களுக்காக சிறப்பு பிராத்தனைகள் ஏறெடுக்கப்படுகிறது. மாதந்தோறும் ஒரு மாநிலத்திற்காக ஒரு மாவட்டத்திற்காக திறப்பிலே நின்று ஜெபித்து வருகிறோம். பின்பு சிறப்பு கூடுகைக்காக சிறுபிள்ளைகள் பிரித்து அனுப்பப்படுகிறார்கள்.

கடந்த மாத ஜெபங்களில் கலந்து கொண்டு அற்புதங்களைப் பெற்றோரின் சாட்சிகள் அனைவர் விசுவாசத்தையும் தூண்டி விடுகிறது. அதைத் தொடர்ந்து கடிதம் எழுதி ஜெபிக்கக் கேட்டுக் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக கூடி வரும் அத்தனை பேரும் இணைந்து திறப்பிலே நின்று ஜெபிக்கிறார்கள். இந்த ஜெபத்தைக் கேட்டு தேவன் செய்து வருகிற அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. திறப்பின் வாசல் ஜெபத்தை நாடி ஒவ்வொரு மாதமும் சுமார் 15,000 கடிதங்கள் வருகிறது. அத்தனை கடிதங்களுக்கும் ஜெபித்து பதில் அனுப்பப்படுகிறது.

பின்பு கர்த்தருடைய செய்தியை சகோதரர் பகிர்ந்து கொண்டு கண்ணீரோடு வருகிற மக்களுக்காக பிரார்த்திக்கும் பொழுது தேவவல்லமை பலமாய் வெளிப்படுகிறது. கேன்சர் கட்டிகள் மறைகிறது. செயல்படாத உறுப்புகள் செயல்படுகிறது. பலத்த அற்புதங்கள் நடைபெறுகிறது. அற்புதங்களைப் பெற்றவர்கள் உடனடியாக மேடையேறி சாட்சி சொல்லி தேவனை மகிமைப்படுத்துவது ஆனந்த நேரமாகும்.

இந்த ஜெபத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டோர் ஏராளம்! ஏராளம்! அபிஷேகம் பெற்றோர் ஆயிரமாயிரம்! அற்புதங்களைப் பெற்றோர் அளவிட முடியாதோர்! அனைத்து மகிமையும் ஆண்டவருக்கே.

 
ஜனங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க கர்த்தர் என்னை ஆயத்தப்படுத்தினார்

1979ஆம் ஆண்டு நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்கியேல் 22:30) என்ற வசனத்தைக் கொண்டு அடிக்கடி கர்த்தர் என்னோடு பேசி வந்தார். முதலில் இவ்வசனத்தின் அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வசனத்தை வைத்து ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு நாள் இவ்வசனத்தை ஆதாரமாக வைத்து ஒரு ஊழியர் எழுதின செய்தி என் கையில் கிடைத்தது. இதை வாசித்தபோது கர்த்தர் தெளிவாக என்னோடு பேசுவதை உணர முடிந்தது. பாவத்திலும், வியாதியிலும், பிரச்சனைகளிலும் கட்டுண்டு கலங்கி தவிக்கிற மக்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்கும்படியாக உன்னை நான் தெரிந்து கொண்டேன் என்று கர்த்தர் பேசினார்.

ஜனங்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்க வேண்டுமானால் ஜனங்களைக் குறித்த மனதுருக்கமும், பாரமும் வேண்டுமே என்று ஜெபித்து வந்தேன். ஜனங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க கர்த்தர் என்னை ஆயத்தப்படுத்தினார். அந்நாட்களில் இரவில் எங்கள் வீட்டில் யாவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபிக்க ஏவுவார். என் அறையில் நான் ஜெபிக்க ஆரம்பித்ததும், வியாதிப்படுக்கையில் இருக்கும் ஒரு சகோதரியை கர்த்தர் என் கண் முன் நிறுத்துவார். அவர்கள் படும் வேதனையை நேரடியாக என்னால் பார்க்கமுடியும், ஆனால் யாரென்று எனக்குத் தெரியாது. இந்த சகோதரியின் விடுதலைக்காக ஜெபி என்று கர்த்தர் சொல்லும்போது என் உள்ளம் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தெய்வீக அன்பினால் நிரம்பும். கண்ணீரோடு அந்த சகோதரிக்காக ஜெபிப்பேன். குடி பழக்கத்தில் அடிமைப்பட்டு விடுதலை பெறமுடியாமல் தவிக்கிற சகோதரனை என் கண் முன் நிறுத்துவார். இந்த சகோதரனின் விடுதலைக்காக ஜெபி என்று கர்த்தர் சொல்லுவார்.

இப்படி கஷ்டத்திலும், வேதனையிலும் இருக்கும் மக்களை கர்த்தர் என் முன் நிறுத்தி ஜெபிக்க ஏவினார். பல மணி நேரங்கள் கண்ணீரோடு இந்த மக்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். பல இரவுகள் இவ்விதமாய் ஜெபத்தில் கழிந்தது. இந்நாட்களில்தான் ஆத்துமாக்களைக் குறித்த பாரமும், தேவைகளோடிருக்கிற மக்களைக் குறித்த மனதுருக்கமும் என் உள்ளத்தை நிரப்பிற்று, கர்த்தர் இவ்விதமாய் திறப்பிலே நின்று ஜெபிக்க என்னை ஆயத்தப்படுத்தினார்.

- சகோ. மோகன் சி. லாசரஸ்

 
சாட்சிகள்

நாங்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். என் மகள், வயிற்றுப் பகுதியைத் தொடமுடியாத அளவிற்கு, நான்கு மாதங்களாக வயிற்று வலியினால் கஷ்டப்பட்டாள். பரிசேõதித்த டாக்டர்கள் குடல் பகுதியில் வால் போன்ற ஒரு உறுப்பு இருக்கிறது. ஆபரேஷன் செய்தால்தான் சுகமாகும் என்று சொல்லி விட்டார்கள்.

இதற்கிடையில், நாலுமாவடியில் நடைபெறும் திறப்பின் வாசல் ஜெபத்தில் அடிக்கடி பங்கு கொள்வேன். அங்கு சாட்சி வேளைகளில் சொல்லப்படுகிற சாட்சிகளையோ, ஜெப வேளைகளில், சகோதரர் அவர்கள் ஜனங்களைப் பெயர் சொல்லி கூப்பிடுகிற காரியங்களையோ நம்ப மாட்டேன். ஏற்கனவே சொல்லி வைத்துக் கொண்டு. இவைகளையெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், என்ற போதிலும், ஆண்டவரே திறப்பின் வாசல் ஜெபத்தில் சாட்சி சொல்கிறவர்களுக்கு நீர் அற்புதம் செய்வது உண்மையானால், என் மகளுக்கும் அற்புதம் செய்யும் என்று நான் ஜெபித்தேன். அவளை ஆபரேஷனுக்காக ஆயத்தம் செய்து, தியேட்டருக்குள் கொண்டு போனார்கள். என்னை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள். அவளை என் மடியில் படுக்க வைத்துக் கொண்டு, ஆண்டவரே இந்தக் கடைசி நிமிடத்தில்கூட, உம்மால் என் மகளுக்கு ஆபரேஷன் இல்லாமல் சுகம் கொடுக்க முடியும் என்று மிகுந்த கண்ணீரோடு ஜெபித்தேன். வேதனையோடு இருந்த என் மகள், திடீரென்று சிரித்த முகத்தோடு எழுந்து அம்மா, இப்பொழுது மின்சாரம் போன்ற ஒரு வல்லமை என்னைத் தொட்டதை நான் உணர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து எனக்கு வலியில்லை. என் வயிற்றை அழுத்தி பாருங்கள் என்று சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஆண்டவருடைய வல்லமைதான் அவளைத் தொட்டிருக்கிறது என்பதை மாத்திரம் அறிந்து கொண்டேன்.

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறதைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர்களாலும் நம்ப முடியவில்லை. மீண்டும் பரிசேõதித்துப் பார்த்தார்கள். அவர்களே ஆச்சரியப்படும்படி, ஆண்டவர் அற்புதமாக அந்த உறுப்பை மறையச் செய்து, ஆபரேஷன் இல்லாமலே, என் மகளுக்கு பூரண சுகத்தைக் கொடுத்தார். நீங்கள் நம்புகிற இயேசுதான் உண்மையான தெய்வம்! என்று டாக்டர்களே சொல்லக் கர்த்தர் கிருபை செய்தார்.

- அன்னம்மாள் (கிருஷ்ணாபுரம் (திலி))

மேலும்... | Back

முக்கிய செய்திகள்

11-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு