24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

கிராம ஊழியம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு  கிராம ஊழியம்

 
அறியாதோர்க்கு அன்பின் நற்செய்தி!

இரட்சிக்கப்பட்டவுடன் சகோதரர் செய்த முதலாவது ஊழியம் கைப்பிரதிகள் முலம் சுவிசேஷம் அறிவிப்பதுதான். யாரும் கேள்விக் கேட்டுவிடக்கூடாது ஆண்டவரே என்று ஜெபித்துக் கொண்டே கைப்பிரதிகள் வழங்குவார்களாம். நாளுக்கு நாள் என் ஜனத்திற்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமே என்ற தாகம் பெருகியது. அதிகமான ஜெபத்திற்கும், ஆயத்தத்திற்கும் பிறகு 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயேசு விடுவிக்கிறார் சுவிசேஷ ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப நாள்களில் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கிராமங்களுக்குச் சென்று சுவிசேஷத்தை தெருக்களில் பிரசங்கித்து, வீடு வீடாக கிறிஸ்துவை அறிவித்து வந்தார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களிலுள்ள ஏராளமான கிராமங்களில் இதன் மூலம் சுவிசேஷ ஒளி பரவியது. அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சிகளாக மாறினார்கள்.

சுவிசேஷ மயம் :

தேவன் இவ்வூழியத்தின் எல்லைகளை விரிவாக்கினார். சுவிசேஷக் குழுவினரை ஏற்படுத்தினார். மருத்துவமனைகள், சிறைச்சாலைகளுக்கு சுவிசேஷத்தை சுமந்து செல்ல தேவன் கிருபை பாராட்டினார். நற்செய்தி வாகனம் வாங்கிக் தந்தார். மாவட்டங்களை சந்திக்க ஆரம்பித்ததின் விளைவாக விழுப்புரம், சேலம், திருநெல்வேலி, இராமநாதபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள கிராமங்கள் இதன் மூலம் சுவிசேஷ மயமாக்கப்பட்டது.

ஜெப நடை :

ஒவ்வொரு மாவட்டத்தைக் குறித்தும் தெளிவான புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பின்பு கிராமங்களில் தீவிர ஜெப நடை (þழிதீளþ ழழியிவ) செய்யப்படுகிறது. பின்பு வீடுகள் தோறும் கைப்பிரதிகள், சுவிசேஷபுத்தகங்கள் வழங்கப்படுவது மாத்திரமல்ல தனித்தனியே ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வழிநடத்தப்படுகிறார்கள்.

பிரத்தியேக கைப்பிரதிகள் :

இவ்வூழியத்திற்காக பல தலைப்புகளில் பிரத்தியேகமான கைப்பிரதிகள் நமது ஊழியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்பு பின்தொடர் ஊழியங்கள் செய்யப்படுகிறது. ஜெபக்குழுக்கள் உருவாக்கப்படுகிறது. ஆண்டவரை ஏற்றுக் கொண்ட ஆத்துமாக்கள் ஆங்காங்கே உள்ள சபைகளில் இணைக்கப்படுகிறார்கள். புதிதாக ஆண்டவரை ஏற்றுக் கொண்ட ஆத்துமாக்கள் கூடி ஆராதிக்க, ஆலயங்களும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வூழியத்தில் எங்களோடு இணைந்து பல ஊழியத்திலுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தின் மூலம் அற்புதங்கள் பெற்றோர் ஏராளமானோர். பகல் முழுவதும் கைப்பிரதிகள் மூலம் சுவிசேஷ ஊழியம் செய்து விட்டு, இரவில் படக்காட்சிகள், குறுநாடகங்கள், நற்செய்தி கூட்டங்கள் மூலம் சுவிசேஷத்தை எமது குழுவினர் அறிவித்து வருகிறார்கள். இவ்வூழியத்தின் மூலம் இதுவரை சில கோடி கைப்பிரதிகள் அச்சடித்து விநியோகித்திருக்கிறோம். சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலங்கை மற்றும் பல தேசங்களுக்கு கைப்பிரதிகள் இலவசமாக அனுப்பியிருக்கிறோம்.

தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள் :

இன்னும் இவ்வூழியத்தை தீவிரமாக செய்ய திட்டமிடுகிறோம். தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். நிறைவேற்றியே தீருவோம். பல லட்சம் ரூபாய் இவ்வூழியத்திற்காக ஆண்டு தோறும் செலவிடப்படுகிறது. அவைகள் அனைத்தும் ஒரு ஆத்துமாவிற்கு ஈடாகாது என்று அறிந்திருக்கிறோம். எங்களோடு கரம் கோர்த்து இவ்வூழியத்தை செய்ய உங்களையும் அன்போடு அழைக்கிறோம்.

 
சாட்சி

1. என் குடும்பம் ஒரு கிறிஸ்வக் குடும்பமாக இருந்தும் சுமார் 23 வருடங்களாக குடி, புகை பிடிக்கும் பழக்கம், மட்டுமல்லாது என்னென்ன தீய பழக்கங்கள் இருக்குமோ எல்லாப் பழக்கத்திற்கும் அடிமைப்பட்டவனாய் இருந்தேன். குடிகாரர்களே பயப்படக்கூடிய அளவிற்கு மிகப் பயங்கரமான குடிகாரனாக இருந்தேன்.
தற்செயலாக இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தினுடைய, நண்பனே . . . . . . . உன்னைக் குறித்து பாரமுள்ள ஒருவர் என்ற ஒரு கைப்பிரதி எனக்குக் கிடைத்தது. அதை என் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டேன். வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன். ஒருநாள் தற்செயலாக அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதிலுள்ள வார்த்தைகள் என் இருதயத்தைத் தொட்டது. மனம் மாறி, கர்த்தரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். எல்லாப் பாவப் பழக்க வழக்கங்களையும் விட்டு ஓய்ந்து, ஆண்டவருக்கு சாட்சியாக, பரிசுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குடும்பமாக தவறாமல் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை ஆராதித்து வருகிறோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

எட்வர்ட் (மேல இலந்தைக்குளம்)

சிறுமைப்பட்டவர்களுக்கு சிவசேஷத்தை அறிவிக்க என்னை அனுப்பினார்.
லூக்கா 4:18

Back

முக்கிய செய்திகள்

11-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு