நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு
பெண்கள் புதுவாழ்வு முகாம்
பெண்கள் நாட்டின் கண்கள்!
கர்த்தருடைய பெரிதான கிருபையால், முதல் பெண்கள் புதுவாழ்வு முகாம் மார்ச் 1ம் தேதி 1997ம் ஆண்டு நாலுமாவடி தேவனுடைய வீட்டில் வைத்து நடைபெற்றது. அதை தொடர்ந்து பெங்களூர், ஏழாயிரம்பண்ணை, தூத்துக்குடி, வள்ளியூர், கன்னியாகமரி, பாளையம்கோட்டை, நாகர்கோவில், தேனி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இம்முகாம் நடைபெற்றது.
இம்முகாமதின் பிரதான நோக்கம், குடும்பங்கள் சிறிஸ்துவுக்குள் கட்டப்படவேண்டும், சாராளைப்போல குடும்பத்தை கட்டியெழுப்ப வேண்டும்! எஸ்தர் இராஜாத்தியைப்போல் தேசத்திற்காக ஜெபிக்க வேண்டும்! தெபோராளைப்போல் தேவனுக்காக எழும்ப வேண்டும்! என்பதே.
இம்முகாமிற்காக அபிஷேகம் பெற்ற பெண்கள் குழுவினர் ஜெபித்து ஆயத்தப்படுகிறார்கள். தேவனின் சித்தத்தின்படி அவர் காட்டும் இடங்களுக்கு சென்று பெண்கள் மத்தியில் ஊழியம் செய்கிறார்கள். கர்த்தரை துதித்து பாடல்கள் பாடி அவரை ஆராதனை செய்து குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக, இரட்சிப்பிற்காக, பிரிவினை ஆவிகள் அழிக்கப்பட, குடிகார கணவர் மற்றும் பிள்ளைகள் மனந்திரும்ப, வரதட்சணை கொடுமைகள் மாற, பெண் சிசுக் கொலைகள் தடுக்கப்பட, திக்கற்ற பிள்ளைகள், விதவைகளுக்காக, கடன் பிரச்சனை மாற, குடும்பத்தில் உள்ள சாபங்கள் மாற, வாலிப பிள்ளைகளுக்காக, உயர் அதிகாரிகளுக்காக, மாவட்டங்களுக்காக, கர்த்தரின் சமுகத்தில் பாரத்துடன் ஜெபிக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற கிறிஸ்துவுக்குள் தங்கள் குடும்பத்தை கட்டி கொண்டிருக்கும் பெண்கள் தங்கள் அனுபவ சாட்சிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். பின் நம் அன்பு சகோதரி ஜாய்ஸ் லாசரஸ் அவர்கள் பெண்கள் எப்படி குடும்பத்தை கட்ட வேண்டும் என்பது பற்றி(புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கையினால் அதை இடித்துப் போடுகிறாள் நீதி.14:1) தேவ செய்தியை பகிர்ந்து கொண்டு பிரார்த்தனை ஏறெடுக்கிறார்கள். தேவன் ஒவ்வொரு முகாமிலும் பலத்த காரியங்களையும் செய்து வருகிறார். மெய்யாகவே ஜனங்கள் ஆசீர்வாதத்துடன், சமாதானத்தோடு இனி குடும்பத்தை கட்டும் புத்தியுள்ள ஸ்திரீயாக வாழ்வோம் என்று உறுதியான தீர்மானங்களுடன் செல்கின்றனர்.
தேவன் தம்முடைய வல்லமையை இப்படிப்பட்ட பெண்கள் புதுவாழ்வு முகாம்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார்.
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் மூலமாக நடத்தப்படும் இது போன்ற பெண்கள் புதுவாழ்வு முகாம்களுக்காக நம் அன்பு சகோதரி ஜாய்ஸ் லாசரஸ் அவர்களை தேவன் இன்னும் வல்லமையாக பயன்படுத்த ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நான் கடன் பாரத்தினால் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் பெண்கள் புதுவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன். சகோதரியிடம் தனித்து என்னுடைய கடன் பாரத்தை பகிர்ந்து கொண்டு ஜெபித்தேன். எனக்காக சகோதரியும் பாரத்தோடு ஜெபித்தார்கள். ஜெபித்த சில நாட்களிலேயே ஆண்டவர் அற்புதம் செய்து, எல்லா கடன் பிரச்சனைகளையும் மாற்றி விட்டார்.
- சகாய நிர்மலா (நாகர்கோவில்)
4 வருடங்களாக வயிற்று வலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஜெப வேளையில், கர்த்தருடைய வல்லமை என்னைத் தொட்டது. வயிற்று வலி சுகமானது.
- பாக்கியமேரி (கம்பம்)
என்னுடைய குடும்பம் மிகுந்த சாபத்திற்குள்ளாக இருந்தது. எதினால் இந்த சாபம் என்று தெரியாதபடிக்கு நான் கலங்கிக் கொண்டிருந்தேன். பெண்கள் முகாமில் கலந்து கொண்டு சகோதரியினுடைய செய்தியை கேட்ட பொழுதுதான், சாபத்திற்கு காரணம் நான் தான் என்பதை கண்டு கொண்டேன். தேச சமுகத்தில் என்னை ஒப்புக் கொடுத்து ஜெபம் பண்ணினேன். ஜெபநேரத்தில் ஒரு வல்லமை என் மீது இறங்கி வந்தது. என் குடும்பத்தில் உள்ள சாபங்கள் எல்லாம் முறிந்தது.
- ராஜகுமாரி ஜோசப் (நாகர்கோவில்)
என் குடும்பத்தை நடத்த தெரியாதபடிக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். பெண்கள் புதுவாழ்வு முகாம் கூடுகையில் கலந்து கொண்ட பொழுதுதான் எப்படிப்பட்ட தாயாக, எப்படிப்பட்ட மனைவியாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தேவன் சித்தம் வைத்தார். நன்றி.
- லிற்றில் பிளவர் அந்தோனியடிமை (கடியப்பட்டணம்)
