24 மணி நேர ஜெப உதவிக்கு : (+91) 04639 - 235 315
+91-9942235304

வாலிபர் ஊழியம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் :- முகப்பு வாலிபர் ஊழியம்

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்... சங். 119:9

இளம் தலைமுறை இயேசுவுக்கே

வாலிபர்களை இயேசு அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்காக தமது வாலிபத்தின் இரத்தத்தை சிந்தினார். வாலிபர்கள் சந்திக்கப்பட வேண்டும், தேவனுக்காக ஒரு சேனையாக எழும்ப வேண்டுமென்ற பாரத்தை கொடுத்ததின் விளைவாக உதித்ததுதான், இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியம்.

1985ம் ஆண்டில் முதல் வாலிபர் எழுப்புதல் முகாம் நடத்தப்பட்டது. சில நூறு வாலிபர்கள் கலந்து கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு (2008) நடைபெற்ற வாலிபர் முகாமில் சுமார் 7,000 வாலிப சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்று வருகிற வாலிபர் கொண்டாட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான வாலிபர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தையும்,

ஆபிஷேகத்தையும் அளவில்லாமல் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்றனர். வாலிபர்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் உயர்ந்த நிலையில் வர சீரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

வாலிபர்கள் நடுவில் ஊழியம் செய்ய வாலிப ஆண்கள் பிரிவு மற்றும் வாலிப பெண்கள் பிரிவு தனித்தனியே செயல்பட்டுவருகிறது. இதற்கென்று சென்னையிலும் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு சகோதரி ரோஸ்லின்ட் ரெக்ஸ் தலைமையில் இயங்கி வருகிறது. பள்ளிகள், கல்லுரிகளுக்கு சென்று ஊழியம் செய்து வருவதன் விளைவாக அநேக இருளடைந்த வாலிப உள்ளங்கள் மெய்யான ஒரே தேவன் இயேசுவால் பிரகாசிப்பிக்கப்பட்டு வருகிறாõர்கள். பெங்களுர் பட்டணத்தில் ஊழியம் செய்யும் STEVE GYM குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளோடு நடைபெறும் ஊழியம் வாலிபர்களின் உள்ளத்தில் மறுரூபத்தை கொண்டு வருகிறது.

விடுதலைப் பெருவிழாவிற்காக செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் வாலிபர் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுவதின் விளைவாக ஏராளமான வாலிபர்கள் ஆசீõவதிக்கப்பட்டு வருகிறார்கள்.

விளையாட்டுத் துறையில் உள்ள வாலிபர்கள் தேவ நாம மகிமைக்காக பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக கால்பந்து, கைப்பந்து போõட்டிகள் நடத்தப்பட்டு சுழற்கேடயம் வழங்கி வருகிறோம்.

வாலிபர்கள் சமுதாயத் தொண்டுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக WINNERS YOUTH CLUB தொடங்கதிட்டமிடப்பட்டுள்ளது. நாட்டு நலப்பணிகள், இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள் இன்னும் ஏராளமான சமுதாயப்பணிகள் இதன் மூலம் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

அவருடைய நாமம் தரிக்கப்பட்ட பிள்ளைகள் தானியேலைப்போல யோசேப்பைப்போல உயர்ந்த நிலையில் வரவேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், (IAS,IPS) தேர்வு எழுத விரும்புகிறவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தி நமது ஊழியத்தின் சார்பில் மேலான ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். இன்னும் வாலிபர்கள் நடுவில் மகிமையான எழுப்புதல் ஏற்பட்டு வருங்கால சமுதாயம் வளமான தூய்மையான சமுதாயமாக மாற ஜெபித்து திட்டமிட்டு வருகிறோம். தேவசித்தம் நிறைவேற நீங்களும் ஜெபியுங்கள்.

Jolly Time இணையதளம் : www.youthworld.in/

 
சாட்சி:

நான் மும்பையில் இருந்து இயேசு விடுவிக்கிறார் வாலிபர் முகாமிற்கு வந்தேன். கூட்டத்திற்கு வருகிறதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக கண்ணில் ஏற்பட்ட பிரச்சனையினால் சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி அணிந்திருந்தேன். இக்கூட்டத்தில் வந்து ஜெபித்தபோது என்னுடைய கண்களின் தேவனுடைய வல்லமை இறங்கியது. உடனே கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்த பொழுது, என்னால் நன்றாக அனைத்தையும் பார்க்க முடிந்தது. தேவன் என் கண்களை தொட்டு குணமாக்கியிருப்பதை நான் பலருக்கும் சொல்லி சாட்சியாக ஜீவிப்பேன்..

ஜாண் கிட்டஸ் (மும்பை)

 
விளையாட்டு வீரர்களுக்கு

Jolly Time இணையதளம் : www.youthworld.in/sports/

Back

முக்கிய செய்திகள்

12-Mar-2010   Good morning

 
முக்கிய சாரம்சம்
 
இணைப்பு நிலையில்

விருந்தினர்கள் ஜூன்01 , திங்கள் 2009 முதல்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
 
புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
 
வாக்குப் பதிவு